india

img

13 வயது சிறுவனுக்கு தடுப்பூசி போட்டதாக கணக்கு.... பாஜக ஆளும் ம.பி. மாநில அரசின் மோசடி?

போபால்:
பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச மாநிலம், நாட்டிலேயே மிக வேகமாக தடுப்பூசி போடும்மாநிலமாக தன்னைத்தானே கூறி வருகிறது. கடந்த ஜூன் 21 அன்று ஒரேநாளில் மட்டும் 17.42 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட்டதாக கணக்கு காட்டிய ம.பி. அரசு, ஜூன் 23 அன்று 11.43 லட்சம் டோஸ்கள், ஜூன் 24 அன்று 7.05 லட்சம் டோஸ்கள், ஜூன் 26 அன்று 9.64 லட்சம் டோஸ்கள் என தடுப்பூசிகள் போட்டதாகவும் கணக்குக் காட்டியது.

இந்நிலையில்தான் மத்தியப் பிரதேசத்தில் 13 வயது சிறுவனுக்கும் தடுப்பூசி போட்டதாக ம.பி. அரசு அனுப்பிய குறுஞ்செய்தி சர்ச்சையாகியுள்ளது.இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கான ‘ஜைடஸ் காடிலா’ கொரோனா தடுப்பூசி தற்போது சோதனையில் மட்டுமே உள்ளது. அந்தத் தடுப்பூசிக்கு முறையான அனுமதி கிடைக்க இன்னும் சில மாதங்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.ஆனால், மத்தியப் பிரதேசத்தின் போபாலை சேர்ந்த ரஜத் டாங்க்ரே என்பவருக்குத் திங்கட் கிழமை இரவு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில்அவரது 13 வயது மாற்றுத்திறனாளி மகனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரஜத் டாங்க்ரேவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போன அவர், பின்னர்தான், தனது மகனுக்கு மாற்றுத் திறனாளிகளுக் கான உதவித்தொகை கேட்டு கடந்த வாரம்விண்ணப்பம் அளித்திருந்ததை நினைவுப் படுத்தி, அந்தத் தரவுகளைக் கொண்டுதான் தற்போது தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது என்று கண்டறிந்துள்ளார்.இதேபோன்ற குற்றச்சாட்டு ம.பி. மாநிலம்முழுவதுமே எழுந்துள்ளது. குறிப்பாக, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்தும், அதனைச் செலுத்திக் கொள்ள முடியாமல் போனவர்கள்; அரசின் இதரதிட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கே கொரோனா தடுப்பூசி போட்டுவிட் டோம் என்று குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில், சைனேந்திர பாண்டே என்ற நபரின் மொபைலுக்கு அவருக்குத் தொடர்பே இல்லாத மூன்று நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.