india

img

ஆப்கனிலிருந்து இந்தியர்களை மீட்க முன்பே நடவடிக்கை எடுக்காதது ஏன் ? வெளியுறவு அமைச்சரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேள்வி....

புதுதில்லி:
ஆப்கன் விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில்மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை குழுத்தலைவர் பி.ஆர்.நடராஜன்அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் மழுப்பலாக பதிலளித்துச் சென்றார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்தும், அங்குள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு எடுத்து வரும்நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கிட வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் குழுத்தலைவர்களுக்கான கூட்டம் அண்மையில் (ஆக.26) புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு, அங்குள்ள சூழல் தொடர்பாகவும், இந்தியர்
களை மீட்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை கள் குறித்தும் விளக்கினார். 

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற குழு தலைவர்கள் கேள்விகளை எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்நாடாளுமன்ற குழுத் தலைவர் பி.ஆர் நடராஜன்கலந்து கொண்டு பேசுகையில், அமெரிக்கா வின் ஜனாதிபதி தேர்தலின்போதே, ஆப்கானிஸ் தானில் அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.  அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன், தேர்தல் பிரச்சாரத்தின் போதே தான் வெற்றி பெற்றால் படைகளை ஒப்பந்தப்படி திரும்ப பெறுவேன் என்று பேசினார். 

அமெரிக்கா ஏமாற்றிவிட்டதா?
அவர் வெற்றி பெற்று ஜனாதிபதி பொறுப்பு ஏற்ற பிறகு, படைகளை  திரும்பப் பெற போவதாக அறிவித்தார். செப்டம்பர் மாதம் படைகளை திரும்பப் பெறுவதாக சொன்ன அமெரிக்காஆகஸ்ட் மாதமே, படைகளை திரும்பப்பெற்றதுகுறித்து இந்தியாவிடம் தெரிவிக்கவில்லையா?. முன்கூட்டியே, அங்குள்ள இந்தியர்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் துவங்கியிருந்தால் இந்நேரம் அனைவரும் பத்திரமாக நாடு திரும்பி இருப்பார்கள். ஏன் அரசு அதைசெய்யவில்லை.  ஆப்கானிஸ்தானில் இருந்து 
படைகளை திரும்பப் பெறுவது குறித்த சரியான தகவல்களை இந்தியாவுக்கு தராமல்அமெரிக்கா ஏமாற்றிவிட்டதா ? அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக தன்னை காட்டிக் கொள்ளும் ஒன்றிய அரசு ஆப்கன் விவகாரத்தில்முடிவு எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப் பட்டது ஏன்?   என்றும் கேள்வி எழுப்பினார்.

வெளியுறவுக் கொள்கையின் தோல்வியா?
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் ஆதரவாளராக இருந்த ரஷ்யா  மற்றும்ஈரான் ஆகிய நாடுகள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை துவங்கி விட்டனர் என்ற தகவல்கள் வருகின்றன. ஒரு புறம் அமெரிக்கா சரியான தகவலை தரவில்லை. மறுபுறம் காலம் காலமாகநம்மை ஆதரித்து வந்த நாடுகளும் வேறு விதமான முடிவுகள் எடுக்கின்றன. இது நமது வெளியுறவுக் கொள்கையின் தோல்வியா? பாஜக அரசின்  வெளியுறவுக் கொள்கை மூலம் நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோமா?   என்றும் பி.ஆர்.நடராஜன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

இதேபோல், ஆப்கானிஸ்தானில் இந்தியா செய்துள்ள முதலீடுகள் பற்றியும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் அங்கு இந்தியா மேற்கொண்டு வரும் 500 திட்டங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பி.ஆர் நடராஜன் எழுப்பியஇக்கேள்விகளுக்கு, ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரிய பதிலளிக்க முடியாமல் மழுப்பலான பதிலளித்து சென்றதாக கூட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.