புதுதில்லி:
நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரைநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே28 லட்சத்து 01 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 135 ஆகஉள்ளது. தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 43 ஆயிரத்து 473- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 8 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 474- ஆக உயர்ந்துள் ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாதடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்ஹர்ஷ் வர்தன் தில்லியில் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களுக்கு அவற்றின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். எந்த மாநிலத்திலும் தடுப்பூசிதட்டுப்பாடு ஏற்படாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படு கின்றன என்று தெரிவித்தார்.