india

img

சட்டமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையாம்..... துணைநிலை ஆளுநருக்கே முழு அதிகாரம் அளிக்கும் சட்டம் அரசிதழில் வெளியீடு....

புதுதில்லி:
கொரோனா இரண்டாவது அலையால் தில்லி உட்பட நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நோயை தடுக்க உருப்படியான பணியைச் செய்யாமல், தில்லியில் துணைநிலை ஆளுநருக்கே முழு  அதிகாரம் அளிக்கும் சட்டத்தை  அரசிதழில் வெளியிட்டு, மாநில அரசின் உரிமையை பறிப்பதில் வேகம் காட்டியுள்ளது மோடிதலைமையிலான மத்திய  பாஜக அரசு. 

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தேசியத் தலைநகர் பிரதேச தில்லி அரசுதிருத்தச் சட்டம் 2021-ஐ மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் தில்லியில் துணைநிலை ஆளுநருக்கே முழு அதிகாரம்உள்ளது என தெரிய வந்துள்ளது. தில்லியில் மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நேரடியாக செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டுஉள்ளது. தற்போது கொரோ னா தடுப்புப்பணியிலும் வெளிப்படுகிறது. தில்லி அரசின் அதிகாரத்துக்குள் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் மத்தியஅரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தில்லி அரசு  சட்டத்திருத்தமானது, எதிர்வரும் காலங்கள் அனைத்திலும் தில்லியின் அன்றாட நிர்வாகம், முடிவுகள், விசாரணை கள் முதலியவற்றில் துணைநிலை ஆளுநர் முக்கியமுடிவுகள் எடுக்கலாம்.ஆனால் அதுகுறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அவர் எந்த ஒரு விளக்கத்தையோ அல்லது பதிலையோ தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று  உறுதிசெய்கிறது. மேலும் சட்ட மன்றத்தை விட அதிகாரம் மிக்கவராக தில்லி துணைநிலை ஆளுநர் இருப்பார். மேலும் இவர் எடுக்கும் முடிவுகளை சட்டப்பேரவை அல்லது சட்டப்பேரவைக் குழுக்கள் மூலம் விசாரிக்க முடியாது என்றும் சட்டத்தின் சரத்துக்கள் கூறுகின்றன.  அதேப்போன்று ‘அரசாங்கம்’ என்கிற வார்த்தை ‘துணைநிலை ஆளுநரைக் குறிக்கும்’ என சட்டத்திருத்தம் வரையறுத்திருக் கிறது என்பது குறிப்பிடத் தக்கது.