india

img

எங்களுக்கான தடுப்பூசி ஆர்டரை மத்திய அரசு தலையிட்டு தடுக்கிறது..... தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு ....

புதுதில்லி:
தங்களுக்கு வந்துசேர வேண்டிய67 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை, மத்திய பாஜக அரசு தலையிட்டுதடுத்து விட்டதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 

பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்க ‘சீரம்’ மற்றும் ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்திடம் தலா 67 லட்சம் தடுப்பூசிகள் விகிதம் மொத்தம் 1.34 கோடி தடுப்பூசிகளை தில்லி அரசு ஆர்டர் செய்திருந்தது.ஆனால், பாரத் பயோடெக் நிறுவனம் தங்களால் தடுப்பூசி வழங்க இயலாது எனத் தெரிவித்துவிட்டது. அதாவது ‘சம்பந்தப்பட்ட’ அரசு அதிகாரிகளின் உத்தரவுப்படி மட்டுமே தடுப்பூசிகளை விநியோகித்து வருவதாக ‘பாரத் பயோடெக்’ நிறுவனம்தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவர்கள் குறிப்பிடும் அந்த சம் பந்தப்பட்ட அதிகாரிகள், மத்திய அரசுஅதிகாரிகள்தான் என்பது அனைவருக்குமே தெளிவாகத் தெரியும். மத்திய ஆட்சியாளர்கள் மற்றமாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகளை விநியோகிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தில்லி அரசின் ஆர்டர், மத்திய அரசின் தலையீட்டால் மறுக்கப்பட்டுள்ளது. எங்களிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் காலியாகிக் கொண்டே செல்கிறது. மாநிலத்திலுள்ள தடுப்பூசி மையங்களில் ‘கோவிஷீல்ட்’ மட்டுமே
செலுத்தப்பட்டு வருகிறது. 100-க்கும்மேற்பட்ட இடங்களில் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகள் செலுத்துவது நிறுத்தப் பட்டுள்ளது.இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.