tamilnadu

img

மோடி அரசை விளாசிய மணீஷ் சிசோடியா தேர்வு மட்டுமே திறமையை நிரூபிக்கும் என்பது மூடத்தனம்!

புதுதில்லி, ஆக.27- மூன்றுமணி நேர ‘நீட், ஜேஇஇ’ தேர்வுகள்தான் ஒருவரின் திறமையை அடை யாளப்படுத்தும் என்பது பழமையில் ஊறிய சிந்தனை என்று, மத்திய அரசை, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோ டியா கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி யில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது: நீட், ஜேஇஇ தேர்வுகளை யொட்டி அனைத்து தடுப்பு நட வடிக்கைகளும் மேற்கொள் ளப்படும் என்கிறார்கள். இதே தடுப்பு நடவடிக்கைகளை கடைப் பிடித்துத்தான் நாடு முழு வதும் 32 லட்சம் பேர் கோவிட் காய்ச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  பாதுகாப்பான சூழலில் இருக்கிறோம் என்கிறார், உள் துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால், அவரே கொரோனா விடம் சிக்கியவர்தான். தில்லி சுகாதார அமைச்சர் உட்பட பல தலைவர்கள் பாதுகாப்பாக இருந்தும் கொரோனாவுக்குத் தப்ப முடியவில்லை. அவ்வா றிருக்கையில் 28 லட்சம் மாண வர்களின் உயிருடன் விளையா டக் கூடாது. எனவே, இந்த விஷயத்தில் பிடிவாதம் தேவையில்லை. 3 மணி நேர தேர்வுதான் மந்திர மாகச் செயல்பட்டு திறமை களை அடையாளம் காட்டும் என்பது மிகவும் பழமையான ஒரு சிந்தனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.