புதுதில்லி:
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள வானாட்டு தீவில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறுசிறு தீவுகளில் அடிக்கடி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஹைதி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1900-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமையன்று தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானாட்டு தீவில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்வானாட்டு தீவில் இருந்து வடமேற்கு பகுதியில் 12 மைல் தூரத்திலும், 56 மைல் ஆழத்திலும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 185 மைல்களுக்குள் உள்ள கடற்கரைகளுக்கு சுனாமி அலைகள் ஏற்படசாத்தியம் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.