புதுதில்லி:
கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மகத்தான வெற்றியைப் பெற்ற தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமைப்பு (சிபிஆர்எப்) வாழ்த்து தெரி வித்துள்ளது.
“இடது ஜனநாயக முன்னணியை வரலாற்று வெற்றிக்கு இட்டுச் சென்ற பினராயி விஜயன், ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்துமீண்டும் ஆட்சிக்கு வந்த முதல் கேரள முதல்வர் ஆவார். சிபிஎம் மற்றும் எல்டிஎப்ஆகியவற்றிற்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத் தவறிய பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும், குறிப்பாக கேரளாவில், சிபிஎம் நடத்திவரும் தொடர் போராட்டங்கள் கட்சியை ஒரு பெரிய தேசிய அரசியல் சக்தியாக ஆக்கியுள்ளன.கோவிட் தொற்றுநோயால் அதிகரித்தபொருளாதார நெருக்கடி மற்றும் அதை எதிர்கொள்ள மத்திய அதிகாரிகள் தவறியது, நவீன சவால்களை எதிர்கொண்டு இந்திய கம்யூனிஸ்டுகள் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை சரியானது என்பதை இந்த தேர்தல் முடிவு தெளிவுபடுத்துகிறது” என்று வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.