புதுதில்லி:
வேளாண் சட்டங்களில் திருத் தங்கள் செய்யப்பட வேண்டும்; வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்என்று ஆர்எஸ்எஸ்-ஸின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கம்(BKS) அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. தங்களின் இந்த கோரிக்கைகள் மீது முடிவெடுக்க மோடி அரசுக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்குவதாகவும், நடவடிக்கை இல்லாதபட்சத்தில் செப்டம்பர் 8 முதல் நாடுதழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிகேஎஸ் சங்கத்தின் பொருளாளர் யுகல் கிஷோர்மிஸ்ரா பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில், செப்டம்பர் 8 அன்றுஒன்றிய அரசுக்கு எதிராக போராட் டத்தில் ஈடுபடுவது உறுதி என்று கூறியுள்ளார்.“புதிய வேளாண் சட்டங்களால்எழும் சர்ச்சையைத் தீர்க்க விவசாயிகள் எழுப்பிய கவலைகளை மனதில் வைத்து குறைந்தபட்ச ஆதரவுவிலை தொடர்பாக புதிய சட்டம்ஒன்றை இயற்றுவதற்கு, ஆகஸ்ட் 31வரை அவகாசம் அளித்திருந்தோம். ஆனால் அரசிடம் இருந்து நேர்மறை
யான தகவல்கள் எதுவும் வரவில்லை. எனவே, செப்டம்பர் 8-ஆம்தேதி நாங்கள் நாடு முழுவதும் அடையாள தர்ணாவில் ஈடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.மேலும் அன்றைய தினம் மாவட்டத் தலைநகரங்களில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, விவசாயிகளின் துயரங்களை விளக்குவோம்; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 8-ஆம் தேதிக்குப் பின்முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார்.