புதுதில்லி:
கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்க மும்பையை சேர்ந்த ஹாப்கின் நிறு வனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புஅதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. இந்தியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஹாப்கின் என்ற நிறுவனத்துக்கு அனுமதி அளிக்குமாறு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை தயாரிக்க மும்பையை சேர்ந்த ஹாப்கின் நிறுவனத்துக்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள் ளது. அதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் ரேணு ஸ்வரூப், மகாராஷ்டிரா தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ளார். ஒரு வருடத்துக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.