புதுதில்லி;
பிரதமர் நரேந்திர மோடியின் சைக்கோ அதிகாரிகளை நம்புவதற்குப் பதிலாக, பொதுமக்கள் தாங்களாகவே கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்வது நல்லது என்று, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.இதுகுறித்து சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,கருத்து ஒன்றைப் பதிவிட்டுள் ளார்.
அதில், ‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தேன். இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் மூன்றாவது அலை பேராபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனை உறுதியும் செய்துள்ளார். கொரோனாவை கட்டுப் படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக, தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே நமக்கு தேவை’ என்று சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.