india

img

தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி....

புதுதில்லி:
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி யளித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக 
தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் மத்திய அரசு, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அறிவித்தனர். இப்பேரணிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றமும் மறுத்துவிட்டது. பேரணி மற்றும் போராட்டத்தை சீர்குலைக்க சில நபர்கள் செய்த சதியையும் விவசாயிகள் முறியடித்தனர். விவசாயிகள் சங்கத் தலைவர்களை சுட்டுக்கொல்ல முயன்ற ஒரு நபரை பிடித்து காவல்துறையிடம் விவசாயிகள் ஒப்படைத்தனர். மேலும் ஜனவரி 26 அன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் உறுதியாக தெரிவித்தனர்.இந்நிலையில், டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்களுக்கு தில்லி காவல்துறை சனிக்கிழமையன்று அனுமதி வழங்கியது. ஆனால் 100 கிலோமீட்டர் வரை பேரணி செல்லலாம் என்று தெரிவித்துள்ளது.