india

img

எனது உறவினருக்கே ஆக்சிஜன், பிளாஸ்மா கிடைக்கவில்லை... பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் குமுறல்....

புதுதில்லி:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமது சகோதரர் ஒருவருக்கு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மருத்துவமனையில் படுக்கை கூட கிடைக்கவில்லை என கூறியிருந்தார், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வி.கே.சிங். பாஜக உள்ளூர் தலைவர்கள் யாராவது உதவி செய்தால் நல்லது என்றும் டுவிட்டர் பக்கத்தில் கெஞ்சியிருந்தார். 

பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வி.கே. சிங்குடன், ஆர்எஸ்எஸ்சின் ‘பஞ்சஜன்யா’ பத்திரிகை ஆசிரியரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான தருண் விஜய்-யும் இணைந்துள்ளார்.தனது 91 வயது அண்ணனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்துவருவதாகவும், எங்கு பார்த்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் டுவிட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை கூட, ‘எங்களால் ஒன்றும் செய்யஇயலாது. வேண்டுமென்றால் உங்கள்அண்ணனை வீட்டிற்கு அழைத்துச்சென்றுவிடுங்கள்’ என்று கூறுவதாகவும், ‘தன் போன்றவர்களுக்கே இதுதான் நிலை என்றால், பொதுமக்கள், எந்தவிதமான அதிகாரமோ வசதியோஇல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?’என்றும், ‘நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை’ என புலம்பித் தவித்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா தொற்றுப் பாதிப்பு சூழலை மோடி அரசுசரியாகக் கையாளவில்லை என்றுஎதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும்நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக் களுக்கு வலுசேர்க்கும் வகையில் வி.கே. சிங், தருண் விஜய் ஆகியோரின்டுவிட்டர் பதிவுகள் மாறியிருப்பது, பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஹரித்துவார் கங்கைக்கரையில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன் என்று கூறி, அவரது சிலையை ஒரு அரசு தங்கும் விடுதியில் கொண்டுபோய் மூட்டை கட்டி போட்டவர்தான் இந்த தருண் விஜய் என்பது குறிப் பிடத்தக்கது.