புதுதில்லி:
நாட்டின் நலன்களைப் பாதுகாத்திட, தொழிலாளிகள்-விவசாயிகள் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும், அகில இந்தியவிவசாயிகள் சங்கம் உட்படஅனைத்து விவசாய சங்கங்களின்ஒருங்கிணைந்த கூட்டமைப்பும் இணைந்து, திங்கட்கிழமை கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:
மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை மற்றும் விவசாயசங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு கூட்டத்தில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக, விவசாய சங்கங்கள் காட்டிவரும் உறுதியை வாழ்த்தி, பாராட்டியது. இப்போராட்டத்தின்போது தங்கள் இன்னுயிரை இழந்த விவசாயிகளுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.‘கறுப்பு’ வேளாண் சட்டங்கள்மூன்றையும் ரத்து செய்ய வேண்டும்என்றும் 2020 மின்சார திருத்தச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து விவசாய விளைபொருளையும் அரசேகுறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்திட சட்ட உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கடுங்குளிர் மற்றும் மழையைப்பொருட்படுத்தாது கடந்த 58 நாட்களாக தில்லியின் எல்லைகளில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக்கொண்டிருக் கிறார்கள். போராடும் விவசாயி களை காலிஸ்தானிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் இன்னும்இதுபோன்ற இழிவான வகைகளிலும் தங்களுக்கு வெண்சாமரம் வீசிடும் கார்ப்பரேட் ஊடகங்களின் மூலமாகவும், விஷப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்காக அரசாங்கம் அமைத்திருக்கின்ற இழிவான சமூக ஊடகப் பேர்வழிகளின் வாயிலாகவும் முத்திரை குத்திடும் அரசாங்கத்தின் துஷ்பிரச்சாரத்திற்கு மத்தியில் விவசாய சங்கங்கள் ஒற்றுமை யுடன் நின்று உறுதியுடன் போராடி வருவதை, கூட்டம் பாராட்டியது.
போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் தலைவர்களையும், அப்பாவி விவசாயிகளையும் கிரிமினல் வழக்குகள் போட்டு, மிரட்டிப்பணியவைத்திட வேண்டும் என்றநோக்கத்துடன் தேசியப் புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினரை அரசாங்கம் பயன்படுத்து வதற்கும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டத்திற்கு விரிவடைந்து வரும் ஆதரவை மத்திய அரசாங்கம் அங்கீகரித்திட வேண்டும், தாமதம் செய்திடும் தந்திரங்களை நிறுத்திக்கொண்டு, உடனடியாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.போராடும் விவசாயிகளுக்கு, நாட்டு மக்களின் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக தொழி லாளர்களும், தொழிற்சங்கங்களும் அளித்துவரும் உறுதியான ஆதரவு மற்றும் ஒருமைப்பாட்டை, கூட்டம் வாழ்த்திப் பாராட்டியது. அவர்கள் நாடு முழுதும் போராட்டம் நடைபெறும் இடங்களில்முன்னணியில் நின்று தங்கள்ஆதரவையும் ஒருமைப்பாட்டை யும் தெரிவித்துக் கொண்டிருக் கின்றனர்.
அனைத்து விவசாயசங்கங்களின் அறைகூவலுக் கிணங்க நடைபெறும் போராட்டங்கள் அனைத்திலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களும் கலந்துகொண்டு பிரச்சாரம்மற்றும் ஆதரவை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனவரி 26 அன்று தலைநகர் தில்லியின் நடைபெறும் டிராக்டர்கள் அணிவகுப்பிலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெறும் அணிவகுப்புகளிலும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளுடன் இணைந்து பங்கேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
மூன்று வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டங்கள், நாட்டின் சொத்துக்கள் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டு கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்பட அனுமதித்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொழிலாளர் வர்க்கமும், விவசாயிகளும் ஒன்றுபட்டு நின்று உறுதியுடன் நடத்திவரும் போராட்டம் மேலும் மேலும் அதிகரிப்பதற்கு கூட்டம் வற்புறுத்தியது. நாட்டின் நலன்களைப் பாதுகாத்திட தொழிலாளர்களும் விவசாயிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றுபட்டுநின்று, வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய தொழிலாளர்கள்-விவசாயிகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திடவும், அவர்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எதிர்காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் மக்கள் விரோத நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக கூட்டுப் போராட்டங்களை நடத்திடு வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து முன்னெடுத்துச் சென்றிடவும் மேலும் தீர்மானிக்கப்பட்டது.