புதுதில்லி:
அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக, தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு அவர்கள் நடத்தும் போராட்டம் 100 நாட்களைக் கடந்து தொடர்கிறது. அடக்குமுறைகளைத் தாண்டி மிகுந்த உறுதியுடன் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதில் தேசவிரோத சக்திகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக ஆர்எஸ்எஸ் ஆவே சப்பட்டுள்ளது.“100 நாட்களைத் தாண்டி தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லி விவசாயிகள் போராட்டம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது. இந்த போராட்டம் தொடர வேண்டும் என்பதில் யாருக்குமே விருப்பமில்லை. மத்திய அரசும், இந்த போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தேசவிரோத சக்திகள் அதற்கு இடையூறாக இருக்கின்றனர். நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கின்றனர்” என்று பெங்களூருவில் நடந்த அகில பாரதிய பிரதிநிதி சபையின் முடிவில் அறிக்கை வெளியிட்டுள்ளது.