articles

img

சென்று வாருங்கள், நீதிபதி கன்னா! - கிருஷ்ண தாஸ் ராஜகோபால்

சென்று வாருங்கள், நீதிபதி கன்னா! '

தன்னுடைய அலுவல் பணியில் மிகவும் அமைதியான மனிதராக விளங்கிய நீதிபதி சஞ்சீவ் கன்னா நிறுவனத்தில் இருந்து தனித்து தன்னுடைய குரல் ஒலிப்பதை என்றுமே விரும்பாதவர்! அப்பொழுது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஒவ்வொரு நாளும் செய்திகளில் இடம் பிடித்தார். மென்மையாக கவர்ச்சிகரமாக அவர் பேசுவார். ரத்த தானம் நிகழ்ச்சியில் அதைப்பற்றி கூட பத்து நிமிடம் பேசியதாக ஒரு நிருபர் சிலாகித்தார். உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கிறிஸ்துமஸ் கேரோல்களை பாடி புகைப்படத்தில் இடம்பெற்றார்.  அவருடைய அமர்வின் செயல் திறனை காண அமீர்கான்  போன்ற பிரபலங்கள் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.பிற நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அவருடைய செயல்பாட்டை காண்பதற்கு வந்தனர். நீதிமன்றம் உண்மை யிலேயே உலகளாவியதாக உணரப்பட்டது. அது மேலும் கவனத்தை ஈர்த்தது.  

அமைதி, பணிவு, திறமை....

11.11.2024 அன்று இவை எல்லாம் அடியோடு மாறிப்போனது.ஆம் நீதிபதி கன்னா 51ஆவது தலைமை நீதிபதியாக ஒரு சிறிய விழாவில் பதவியேற்றார்! குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்வில் அரசு உத்தரவில் கையொப்பமிட்டு அங்கே வந்திருந்த புகழ்பெற்ற பார்வையாளர்களை பார்த்து பணிவுடன் கைகூப்பினார். ஒரு புன்னகையுடன் தனது இருக்கைக்கு திரும்பினார்.

அறிவுக்கூர்மை

 காலை 11 மணிக்கு நீதிமன்றம் பணிக்கு திரும்பியது. நீதிமன்ற அறையில் ஒருவித நிதானம் நிலவியது . தலைமை நீதிபதி கன்னா பேசிய நேரங்கள் மிகவும் அரிது. வழக்கறிஞரின் வாதங்களை ஏற்கவில்லை என்றால் எப்பொழுதாவது இல்லை இல்லை இல்லை என்று மட்டும் கூறுவார். அவருடைய நேர்காணலுக்காக காத்திருந்த வேளையில் வேறொரு தகுதியான பத்திரிகையாளர் அதைப் பெற்று இருக்கலாம் என்று நினைத்தேன். இருந்தும் கடைசியாக அரை மனதுடன் நான் மீண்டும் முயற்சித்த போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது:   குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பவர்கள் மற்றும் தகராறுகளை தீர்ப்பவர்கள். நீதித்துறையின் அர்ப்பணிப்பும் பொறுப்பும் நிறைந்தவர்கள் உடையது உச்ச நீதிமன்றம். அதை வழி நடத்தும் நபரிடமிருந்து  அல்ல, அந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ பதில் கிடைத்தது: “நிறுவனத்திலிருந்து தனித்தனியாக ஒரு குரல் எழுவதை தலைமை நீதிபதி கன்னா விரும்பவில்லை”

அரசியல் சாசனத்தில் உறுதி

 அடுத்தடுத்த மாதங்களில் நீதிமன்றப் பணிகளில் அவர் ஓர் அமைதியான மனிதர் என்பது தெளிவானது. கூட்டத்தில் கலந்து கரைந்து விடுவது அவருக்கு இயல்பான ஒன்று. ஆனாலும் அரசியல் அமைப்பின் மீது அவருடைய நம்பிக்கை பொதுமக்களின்  பார்வையில் என்றும் அவரை மதிப்புற வைத்திருந்தது.நீதிமன்றத்தில்  சுருக்கமாக உரையாற்றுவார்.ஆனாலும் ஓர் அதிர்வை ஏற்படுத்துவார்.

நீதிபதிகள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்

வக்பு விசாரணையின் போது நீதிபதிகள்” அமர்வில் அமர்ந்தால் தங்கள் மதத்தை இழக்கின்றனர் “என்று அரசு தரப்பினரிடம் கூறினார்.சம்பலில் வகுப்புவாத வன்முறை மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொண்டார்.  

கூட்டுச் செயல்பாடு

பதினாறாம் நூற்றாண்டில் முகலாய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட கோவில்களை மீட்க வேண்டும் என்ற நோக்கமுடைய வழக்குகள் மீது சிவில் நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பிப்பதை அவர் தடுத்தார். தயாராக இல்லாத வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை செய்யமாட்டார். அடுத்த முறை சிறப்பாக தயாராகுங்கள் என மெதுவாகச் சொல்லுவார். பொதுநல மனுக்களை அமர்வுகளிடையே சீராக விநியோகித்தார். நீதிபதிகளிடையே கூட்டுச் செயல்பாடு 'தெரிந்தது. செயலிலும் ஓய்வு நாட்களிலும் ஒற்றுமை கடைப்பிடிக்கப்பட்டது.

வகுப்புவாதத்திற்கு எதிரான உறுதி

 ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி வகுப்புவாத கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்பட்ட பொழுது ஒரு நெருக்கடி ஏற்பட்டது.நீதிபதியை அழைத்து பொது மன்றத்தில் மன்னிப்புக் கேட்குமாறு கொலிஜியம் கேட்டுக் கொண்டது . மற்றொரு உயர்நீதிமன்ற நீதிபதி அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதி எரிந்த பண கத்தைகளின் சாக்குப் பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நீதித்துறை வெளிப்படைத் தன்மை அற்று இருப்பதாகவும் ஊழல் குற்றச்சாட்டுகளும் வேகம் எடுத்தன.இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி கன்னா புகைப்படங்கள் வீடியோவுடன் கூடிய முதல் கட்ட விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில்  வெளியிட்டார். துறைவாரி விசாரணை நடத்தப்பட்டது . அதன் அறிக்கை ரகசியமாக இருந்தது. ஆனால் அதை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நடவடிக்கைக்காக அனுப்பிய தாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொத்துக்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட முழு நீதிமன்றமும் முடி வெடுத்தது. உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த வேட்பாளர்களின் பட்டியலும் நீதித்துறை நியமன செயல்முறையை விவரிக்கும் ஆவணத்துடன் வெளியிடப்பட்டது  தன் கடைசி வேலை நாட்களில் பத்திரிகையாளருடன் தேநீர் அருந்தும் நிகழ்ச்சிக்காக தலைமை நீதிபதி கன்னா அழைக்கப்பட்டார்.  

எங்களை ஒப்பிட முடியாது

 இதுவரை இந்தியா கண்டிராத சிறந்த ஒரு தலைமை நீதிபதி என பிரபலமாக அழைக்கப்பட்ட அவருடைய புகழ்மிக்க மாமா ஹெச். ஆர். கன்னாவின் மரபு அவரை பாதித்ததா என்ற  நிருபர் ஒருவரின் கேள்விக்கு “எங்களை அப்படி ஒப்பிட முடியாது “என்று  குறிப்பிட்டார். இயல்பான ஒரு மகிழ்ச்சியோடு பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். - கிருஷ்ண தாஸ் ராஜகோபால்  தி இந்து.16/5/25 - தமிழில் கடலூர் சுகுமாரன்.