headlines

img

10 ஆண்டுகளாக நீடிக்கும் துயரம்

10 ஆண்டுகளாக நீடிக்கும் துயரம் 

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று கூறி தமிழகத்தின் திருவண்ணாமலை, தர்மபுரி மாவட் டங்களைச் சேர்ந்த 20 கூலித்தொழிலாளர்கள் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அம்மாநில செம்ம ரக் கடத்தல் தடுப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம்  நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நியாயம் கேட்டு இரு மாநில அரசுகள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.

அவர்கள் ஒரு வேளை செம்மரக் கட்டை களை வெட்டி கடத்தியிருந்தால் கைது செய்தி ருக்கலாம்; ஆனால் ஆந்திர மாநில அரசாங்க மே நீதிமன்றமாக மாறி மரணத் தீர்ப்பு எழுதியது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் ஆந்திரப் பிர தேச தலைமைச் செயலாளர் மற்றும் அம்மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியது.  மேலும் ஆந்திரப் பிரதேச அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த ஆந்திர மாநில அரசு தயாராக இல்லை.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்த ரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. உயர்நீதிமன்றமும் தேசிய மனித உரிமை ஆணை யத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித் தது. அந்த தடை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஆளும் அரசுகளின்  நிர்வாக அமைப்பு முறையில் மாற்றங்கள் நிகழவில்லை. இடைக்காலத் தடையை நீக்குவதற்கு பாதிக்கப் பட்ட குடும்பங்கள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு ஆந்திர மாநில அரசு முட்டுக் கட்டையாக உள்ளது. தற்போது ஒற்றைத் தாய் மார்களால் வழிநடத்தப்படும் பல குடும்பங்கள், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு தினமும் போராடுகின்றன. குழந்தைகள் கல்வியை இழக்கின்றனர், மேலும் வறுமை அவர்களை துரத்திக் கொண்டிருக்கிறது

அப்பாவிகளின் உயிரைப் பாதுகாக்கவும், சம்பவத்திற்குப் பிறகு நீதி வழங்கத் தவறிய ஒரு அரசு அமைப்பின் வேதனையான, கொடூரமான நினைவூட்டலாக இந்த துயரச் சம்பவம் நீடிக்கி றது. இதை இனியும் அனுமதிக்கக் கூடாது.  2007 ஆம் ஆண்டில் நிர்வாக சீர்திருத்த ஆணை யம் மற்றும் 1980 இல் தேசிய காவல் ஆணை யம் பரிந்துரைத்தபடி, காவல்துறையின் நடவடிக் கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த பரிந்துரைகளும் அமல்படுத்தப் படவில்லை. 

ஆந்திர மாநில அரசாங்கம் இந்த பிரச்ச னையில் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். தவறிழைத்த காவல் துறையி னர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு நியாயமான நிவார ணத்தை வழங்கவேண்டும். அதுவரை இந்தியா வின் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இந்த சேஷாசலம் வனப்பகுதி துப்பாக்கிச் சூடு சம்பவம் கருதப்படும்.