india

img

தலைமை நீதிபதியின் கருத்தை விமர்சித்தவர்களுக்கு மிரட்டல் விடுப்பதா? இந்திய பார் கவுன்சிலின் பத்திரிகைச் செய்திக்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம்....

புதுதில்லி:
இந்திய பார் கவுன்சிலின் பத்திரிகைச் செய்திக்கு, பெண்கள் அமைப்புகள் மற்றும் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த அமைப்பு கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இந்திய பார் கவுன்சில் சார்பாக 4.3.21 தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்தி கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியுற்றோம். நீங்கள் உங்கள் பத்திரிகைச் செய்தியில், “விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலஅரசியல்வாதிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் என்று சொல்லப்படுவோர்” மிகவும் உணர்ச்சிவசப் பட்டு, நீதித்துறையை விமர்சித்திருப்ப தாகவும், பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறீர்கள்.  இத்தகைய முயற்சிகள் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல்என்றும் கூறியிருக்கிறீர்கள். இதன்மூலம் தலைமை நீதிபதி, நீதிமன்றத்தில் அளித்திட்ட கருத்துக்கள் மீது விமர்சனங்கள் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் மீது, நீதிபதிகளுக்கு எதிராக அவதூறை வீசியவர்கள் என்று குற்றஞ்சாட்டி இருக்கிறீர்கள்.மேலும் நீங்கள், “இத்தகைய தீங்கிழைக்கும் தாக்குதல் நடைமுறையை நிறுத்திக்கொள்வதற்காக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும்” எனவும் நீங்கள் மிரட்டியிருக்கிறீர்கள்.

பெண்களுக்கு எதிராக பாலின நீதியை மறுக்கும் விதத்தில் எவர் விமர்சனம் செய்தாலும், அது மிகவும் உயர்ந்த அதிகார மையங்களாக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கும் உரிமை நாட்டிலுள்ள அனைவருக்கும் இந்த நாட்டின் சட்டத்தின்படி உண்டு என்பதைத் தயவுசெய்து நீங்கள் குறித்துக் கொள்ளுங்கள்.   எங்களுடைய விமர்சனங்கள் உந்தப்பட்டவை என்றோ அல்லது ஊடகங்கள் மூலமாக தீங்கிழைக்கும் தாக்குதல் என்றோ கூறுவது முற்றிலும் தவறாகும். பாலின சமத்துவத்துக் காகப் போராடிக் கொண்டிருக்கும் பெண்களின் இத்தகைய கருத்துக்கள் உண்மையில் நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தும். பெண்களின் கண்ணோட்டத்தை சரியான பார்வையுடன் எடுத்துக் கொள்வது நீதித்துறையையும் வலுப்படுத்திடும்.நீதிமன்றத்தில் மன்றமறிய நீதிபதிகள் கூறும் கருத்துக்களுக்கு சட்டப் புனிதத்துவம் கிடையாது என்று மேற்படி பத்திரிகை செய்தி கூறுகிறது. ஆனால் அது உயர்நீதித்துறையில் இருப்பவர்கள் கூறியுள்ள இரு விமர்சனங்களும் நீதித்துறையை மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் செல்வாக்கை ஏற்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ள அது தவறியிருக்கிறது.

மேலும் நம் சமூகத்தில் பெண்கள் மீது பாலினத் தாக்குதலை, சொல்லாலோ செயலாலோ மேற்கொள்கின்ற பிற்போக்கு சக்திகளுக்கு இத்தகைய கூற்றுகள், சட்டத்தின்கீழ் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறைக்கப்பட முடியும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.நீங்கள் பிருந்தா காரத் மற்றும் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டி ருப்பது முற்றிலும் வேண்டாத வேலையாகும். நீதிபதி குறிப்பிட்ட பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியவர் சிறுமி என்பதையும், அவர் 10-12 தடவைகள் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார் என்பதையும் தயவுசெய்து குறித்துக்கொள்ளுங்கள்.

அவர் கட்டி வைக்கப்பட்டு, சில சமயங்களில் வாயில்துணியை வைத்து கத்தமுடியாத வாறு தடுக்கப்பட்டு, ஆசிட் ஊற்றிஎரித்துவிடுவோம் என மிரட்டப்பட்டுள் ளார். இவைதான் அவரைத் தற்கொலை செய்துகொள்வதற்கான முயற்சிகளுக்கு இட்டுச்சென்றிருக் கிறது. அந்தச் சிறுமி எந்த சமயத்திலும் தன் சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை. அவ்வாறு கூறுவது தவறு.இரு தரப்பினரின் பெற்றோரும் திருமண ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக் கின்றனர் என்ற விஷயம் ஒரு பொருட்டேஅல்ல. பாலியல் வன்புணர்வு செய்தவனை, அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொள்கிறாயா என்று ஒரு நீதிபதி கேட்பது முற்றிலும் தவறான செயல் என்றே நாங்கள்கருதுகிறோம். அந்தப் பெண் தன்சம்மதத்தை அளிக்கவில்லை என்றுநாங்கள் ஏற்கனவே சொல்லி யிருக்கிறோம். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவன் கைது செய்யப்படாதிருப்ப தற்காக நான்கு வார கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம்.  

மேலும் இரண்டாவது வழக்கைப்பொறுத்தவரை, திருமணம் புரிந்தவர் களுக்கிடையே கூட பாலியல் வன்புணர்வு நடைபெறுமாயின் அதனை பாலியல் வன்புணர்வு என்றே கருத வேண்டும் என பெண்கள் அமைப்புகள் கோரி வருகின்றன. இதுதொடர்பாக ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவருகிறது. நெருங்கிய உறவுகளுக் குள்ளும் மிருகத்தனம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.நீங்கள் மேலும், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் துஷ்பிர யோகம் செய்யப்படுவதாக அப்பட்டமான முறையில் பொய்யாகக் குற்றஞ்சாட்டி இருக்கிறீர்கள்.

பாலினசமத்துவத்திற்காகப் போராடுபவர் களுக்கு எதிராக, இத்தகைய மிரட்டும்மற்றும் அச்சுறுத்தும் பத்திரிகைசெய்திகளை வெளியிடுவதிலிருந்து இந்திய பார் கவுன்சில்  தன்னைத்தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு பெண்கள் அமைப்புகள் அறிக்கையில் தெரிவித்துள்ளன. இந்த அறிக்கையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் சங்கம், போராடும் பெண்களுக்கான மையம், அகில இந்திய அக்ராகாமி மகிளா சமிதி, அகில இந்திய அக்ராகாமி மகிளா சன்ஸ்கிரித் சங்காதன்,  முஸ்லீம் பெண்கள் சங்கம், இந்திய மகளிர் தேசிய சம்மேளனம், பிரகதிஷீல் மகிளா சங்காதன், சஹேலி, ஸ்வஸ்திக் மகிளா சமிதி முதலான அமைப்புகள் கையெழுத்திட்டிருக்கின்றன.(ந.நி.)