india

img

‘உள்மாநில இடஒதுக்கீடு’ நமது கொள்கைக்கு எதிரானது.... ஹரியானா பாஜக அரசுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம்.....

சண்டிகர்:
ஹரியானா மாநிலத்தில்,ரூ.50 ஆயிரம் மாதச்சம்பளத் திலான தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 75 சதவிகிதம் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று ஆளும் பாஜக - ஜேஜேபி கூட்டணி அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

புதிய வேளாண் சட்டங்களால், ஹரியானாவில் பாஜகவுக்கு எதிரான போராட்டங் கள் வலுத்துள்ள நிலையில், அதைத் திசைத்திருப்பும் வகையில் இந்த உத்தரவை முதல்வர் மனோகர் லால் கட்டார் பிறப்பித்து இருந்தார். இந்நிலையில், பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.“உள்மாநில இட ஒதுக்கீட் டினால் தற்காலிகமாக பிரச்சனைகள் தீருமே தவிர, நீண்ட கால நோக்கில் பார்த்தால் ஹரியானா மாநில பொரு ளாதார நலன்களுக்கு இவைநன்மை பயக்காது” என்று ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. மேலும், இது சங்கத்தின் (ஆர்எஸ்எஸ் அமைப்பின்) ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்றகொள்கைக்கு விரோதமானதாக உள்ளது என்று அது தெரிவித்துள்ளது.