புதுதில்லி:
மாநிலங்களுக்கு மேலும் 1.10 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய அரசு இதுவரையில் 54.04 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது. இவற்றில் 52 கோடியே 96 ஆயிரத்து 418 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2 கோடியே 55 லட்சத்து 54 ஆயிரத்து 533 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும், தனியார் மருத்துவமனைகளிடமும் கையிருப்பாக உள்ளன. இந்த நிலையில் மேலும் 1 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 510 தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.