india

img

அகழாய்வுக்கு முன்பே தோலவீராவைக் கண்டுபிடித்தாரா பிரதமர் மோடி..? வங்கதேச விடுதலைக்கு போராடிய கதைதானா?

புதுதில்லி:
எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் ‘அதுதான் எனக்குத் தெரியுமே..!’ என்ற ரீதியில் பேசுவது பிரதமர் மோடியின் வாடிக்கையாகி விட்டது.

சிறுவயதில் குஜராத்தின் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், ‘மோடியிடம் தேநீர் வாங்கிக் குடித்திருக்கிறேன்’ என்று கூறும் ஒருவரைக் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல 1978-இல் தில்லி பல்கலையில் பி.ஏ. பட்டத்தையும், 1983-இல் குஜராத் பல்கலையில் எம்.ஏ., பட்டத்தையும் பெற்றதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், அவருடன் கல்லூரியில் ஒன்றாக- ஒரே டெஸ்கில் அமர்ந்து படித்த மாணவர்கள் இப்போது வரை தேடப்பட்டு வருகின்றனர்.இதுபோதாதென்று கடந்த ஆண்டு வங்கதேசம் சென்ற பிரதமர் மோடி, ‘1971-இல்வங்கதேச விடுதலைக்காக போராடியுள்ளேன்’ என் றும் ‘எனது முதல் சிறை அனுபவமே வங்கதேச விடுதலைக்காகத்தான்’ என்று புதிய தகவலை வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார். சிறையில் மோடியை பார்த்ததாக ஒருவர்கூட இப்போதுவரை கூறவில்லை.

இதனிடையேதான், வடக்கு குஜராத்தின் தோலவீரா பகுதியில் உள்ள புராதன சின்னங்களை உலகபாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக‘யுனெஸ்கோ’ நிறுவனம் செவ்வாயன்று அறிவித்த பின்னணியில், வழக்கம்போல ‘தான் பள்ளியில் படிக்கும்போதே தேலாவீரா புராதனச் சின்னங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்’ என்று மோடி டுவிட்டரில் ஒரு பதிவைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.“எனது மாணவப் பருவத்தில் நான் முதன்முதலில் தோலவீரா-வுக்குச் சென்றேன். அந்த இடத்தைப் பார்த்து சொக்கிப் போனேன். பின்னர் குஜராத் முதல்வராக, தோலவீராவில் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும்மறுசீரமைப்பு தொடர்பான அம்சங்களில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குழு அங்கு சுற்றுலா நட்பு உள்கட்டமைப்பை உருவாக்க வேலை செய்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோலவீரா 1967-68 ஆம்ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏஎஸ்ஐ) ஜே.பி.ஜோஷி என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டாலும், 1990-ஆம் ஆண்டுதான் அகழ்வாராய்ச்சியே தொடங்கியது. அப்படியிருக்க அகழ்வாராய்ச்சி துவங்குவதற்கு முன்பே, தோலவீரா புராதனச் சின்னங்களை மோடி எவ் வாறு பார்த்திருக்க முடியும்? என்று சமூகவலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஏழைத் தாயின் மகனாக- தேநீர் விற்றுக் கொண்டிருந்த பிரதமர் மோடி, 332 கி.மீ. பயணப்பட்டு தோலவீரா சென்றார் என்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர்கள் குறிப் பிட்டு வருகின்றனர்.