india

img

டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரத போராட்டம்!

அரியானாவிடம் இருந்து டெல்லிக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கேட்டு அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

தலைநகர் தில்லியில் சமீப காலமாக மோசமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தில்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இதனிடையே 21-ஆம் தேதிக்குள் அரியானாவில் இருந்து தில்லிக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சத்யாகிரக போராட்டத்தை மேற்கொள்வேன் என அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று வரை தண்ணீர் கிடைக்காததால் தனது உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் அதிஷி தொடங்கியுள்ளார். இன்று ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திவிட்டு, காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். தில்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும்" எனவும் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.