புதுதில்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,73,790 பேருக்குகொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 45 நாட்களுக்குப் பிறகுதினசரி கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது.கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
இதன்படி இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 2,77,29,247 பேர்.கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட் டோர் 1,73,790 பேர். இதுவரை குணமடைந்தோர் 2,51,78,011 பேர். கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் 2,84,601. மொத்த உயிரிழப்புகள் 3,22,512. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர் 3,617. சிகிச்சையில் உள்ளோர்எண்ணிக்கை 22,28,724. இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண் ணிக்கை 20,89,02,445 பேர்.இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை34,11,19,909 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,80,048 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் தொற்று 900 ஆக குறைந்தது
அப்போது 29 ஆயிரம் பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதையடுத்து, தீவிரமான, தளர்வுகள் அற்ற ஊரடங்கை முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். ஏறக்குறைய ஒருமாதத்துக்கும் மேல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், அங்கு தினசரி பாதிப்பு 1,100 ஆகச் சரிந்தது.இதையடுத்து தில்லியில் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும்பணியை தில்லி அரசு தொடங்கியுள் ளது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
தில்லியில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே குறைந் துள்ளது. வெள்ளியன்று 900 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது அலை தொடங்கிய பிறகு கொரோனா தொற்று ஆயிரத்திற்கும் கீழே குறைவது இது முதல் முறை.ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், ஐசியு படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், கொரோனாவுக்கு எதிரான போர் மட்டும்முடியவில்லை.ஒத்துழைப்பு அளித்த தில்லி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் கொரோனாபரவல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரைமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. தில்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. ஆதலால், மே 31 ஆம் தேதி முதல் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும் நடவடிக்கையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ஒருவாரத்துக்கு கட்டுமானப் பணிகளுக் கும், தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதிக்கப்படும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மும்பையில் பாதிப்பு 929 ஆக சரிவு
நாட்டில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இருந்தபோது மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இப்போது மகாராஷ்டிராவிலும் பாதிப்பு குறைந்து வருகிறது.மும்பையில் வெள்ளியன்று புதிதாக 929 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 18-ந் தேதி நகரில் 953 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.இதேபோல மார்ச் 2 ஆம் தேதிக்கு பிறகுமும்பையில் பதிவான குறைந்தபட்ச பாதிப்பு இதுவாகும்.மும்பையில் இதுவரை 7 லட்சத்து 3 ஆயிரத்து 461 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 808 பேர்உயிரிழந்து உள்ளனர். நோய் பாதிப்பில்இருந்து 94 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். மும்பையில் 30 பேர் பலியாகினர். கடந்த மாதம் 13 ஆம் தேதிக்கு பிறகு பதிவான குறைவான எண்ணிக்கை இதுவாகும்.