india

img

மன்மோகன்சிங்கிற்கு கொரோனா பாதிப்பு.... தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி....

புதுதில்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று பாதிப்புஉறுதியானது. கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் மக்கள் அடைந்துள்ள துயரங்களுக்கு தீர்வு காண மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.