புதுதில்லி:
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், இந்தியாவில் வேவு பார்க்கப்பட்ட 300 பேர்களில் ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் தலைவரும், தேர்தல்வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோரும் ஒருவராவார்.இன்றைய பிரதமர் நரேந்திர மோடி முன்புகுஜராத் தேர்தலில் வெல்லவும், 2014 மக்களவைத் தேர்தலில் வெல்லவும் காரணமானவர். பின்னாளில் அமித் ஷாவுடன் ஏற்பட்டகருத்து வேறுபாட்டால், பாஜக உடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டு, அதன்பிறகு எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்க ஆரம் பித்தார். அவற்றில் அவர் வெற்றியும் பெற்றார். தில்லி, பீகார், ஆந்திரா, மேற்குவங் கம் என பல மாநிலங்களில் பாஜக தோற்ககாரணமாக இருந்தார்.இந்நிலையில், பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசி எண்களில், பிரசாந்த் கிஷோரின் எண்ணும் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடைசியாக அவருடைய செல்போன் கடந்தஜூலை 14 அன்று கூட ஒட்டுகேட்கப்பட்டதாக தடயவியல் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித் துள்ள பிரசாந்த் கிஷோர், “எனது செல்போனைஇதுவரை ஐந்து முறை மாற்றி விட்டேன்; இருந்தாலும்கூட ஒட்டுக்கேட்பு பிரச்சனை ஓயவில்லை!” என்று கூறியுள்ளார்.