india

img

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் வரி வருவாய் குறையும் என்பதால் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மறுக்கும் மத்திய-மாநில அரசுகள்..... எஸ்பிஐ வங்கி ஆய்வில் தகவல்....

புதுதில்லி:
ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்தால், பெட்ரோல் லிட்டர் ரூ.75 ஆகவும், டீசல் ரூ.68 ஆகவும் குறையும் என்றும்  ஆனால் வரி வருவாய் குறையும் என்பதால் மத்திய-மாநில அரசுகள் இதனை செயல்படுத்தாமல் கிடப்பில்போட்டுள்ளன என்று அரசியல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பொருளாதார வல்லுநர்கள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு ரூபாயை தொடும் நிலையில் உள்ள பெட்ரோல் விலை உயர்வாலும் 90 ரூபாயைஎட்டும் நிலையில் உள்ள டீசல் விலை உயர்வாலும் வாகன ஓட்டிகளும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் மத்திய  மோடி அரசு மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமலும் கண்டுகொள்ளாமலும் உள்ளது. இதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். 

இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் குழு நடத்திய ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்து.அதில் கூறியிருப்பதாவது:

பெட்ரோல், டீசல் எரிபொருளை ஜிஎஸ்டி வரி முறைக்குள் கொண்டுவர வேண்டும்என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரிக்குள்பெட்ரோலைக் கொண்டு வந்தால் பெட்ரோல் லிட்டர் ரூ.75 ஆகவும், டீசல் ரூ.68ஆகவும் குறையக்கூடும்.ஆனால், ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்தால், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வரி வருவாய் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக ஜிடிபியில் 0.4 சதவீதம் அல்லது ரூ.ஒரு லட்சம் கோடி வரிவருவாய் இழப்பு ஏற்படும். இந்த கணிப்பு என்பது கச்சா எண்ணெய் விலை பேரல் 60 டாலராக இருந்தபோது கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது ஒவ்வொரு மாநிலமும், பெட்ரோல், டீசலுக்கு ஒவ்வொரு விதமான வரியை விதிக்கின்றன. மத்திய அரசு தனியாகதனது பங்கிற்கு உற்பத்தி வரி, செஸ் வரியைவிதிக்கின்றன. இதனால் ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக்கடந்துவிட்டது.பெட்ரோல், டீசல் எரிபொருளை ஜிஎஸ்டிவரிக்குள் கொண்டு வர வேண்டும் என்றுநீண்டகாலமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதை செயல்படுத்த அரசியல் ரீதியாக விருப்பமில்லாமல் கிடப்பில் இருந்து வருகிறது. ஏனென்றால் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வரி வருவாய் ஈட்டித் தருவதில் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் முக்கியமான காரணி என்பதால், அதை ஜிஎஸ்டி வரிக்குள்கொண்டுவருவதற்கு தயக்கம் காட்டு கின்றன.தற்போது பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, செஸ், வாட் வரி, கூடுதல் வரி, போக்குவரத்துக் கட்டணம், டீசல் கமிஷன் உள்ளிட்டவை சேர்த்து விற்பனை செய்யப்படும்போது கடுமையாக விலை உயர்வைச் சந்திக்கிறது.ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவதாக ஊகம் செய்தால், டீசலுக்கு போக்குவரத்து கட்டணம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.25ஆகவும், பெட்ரோலுக்கு ரூ.3.82ஆகவும், டீசல் கமிஷன் டீசலுக்கு லிட்டர் ரூ.2.53,பெட்ரோலுக்கு ரூ.3.67 ஆகவும் உள்ளது. இதுதவிர பெட்ரோலுக்கு ரூ.30ஆகவும், டீசலுக்கு ரூ.20ஆகவும் விதிக்கப்படும் செஸ் வரி சமபங்காக மத்திய, மாநில அரசுகள் பிரித்துக்கொள்ளும், ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் விகிக்கப்படக்கூடும். இதன் மூலம் பெட்ரோல் லிட்டர் ரூ.75ஆகவும், டீசல் லிட்டர் ரூ.68 ஆகவும் குறையக்கூடும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை ஒரு டாலர் உயரும்போது, பெட்ரோல்விலை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் லிட்டர் ரூ.1.50 அதிகரிக்கும். ஆனால், இவைஅனைத்தும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்பட்டால், நுகர்வோர்கள் தற்போது வாங்கும் விலையிலிருந்து பெட்ரோல் ,டீசல்விலையில் லிட்டருக்கு ரூ.30 குறையும். அதேநேரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வரிவருவாயில்  பெரும் இழப்பு ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி,பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய, மாநிலஅரசுகள் கொண்டுவருமா? அல்லது வழக்கம்போல் மக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு வேடிக்கைப் பார்க்குமா? என்று அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.