புதுதில்லி:
‘பெகாசஸ் ஸ்பைவேர்’ மூலம்தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப் பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சித்தக் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் உதவியாளர் மற்றும் ஒன்றியஅமைச்சர் ஸ்மிருதி இரானியின் சிறப்பு செயலாளர் சஞ்சய் கச்சரோ ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுகேட்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல பிரதமர் மோடியின்நீண்ட கால எதிர்ப்பாளரான விஸ்வஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா மற்றும் பல் வேறு பாஜக நிர்வாகிகளின் மொபைல் எண்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்புடைய அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.அவ்வளவு ஏன், வேவு வேலை எதுவும் நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் திங்களன்று பதிலளித்த ஒன்றிய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவின் மொபைல் போனும்‘பெகாசஸ்’ மூலம் வேவு பார்க்கப் பட்டுள்ளது.