புதுதில்லி:
கோவிட் நிதிக்காக தொடங்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நிதியத்தின் நிர்வாகம் முற்றிலும் மர்மமாகவே உள்ளது. எவ்வளவுதிரட்டப்பட்டது, செலவிடப்பட்டது எவ்வளவு என்பதுயாருக்கும் தெரியாது. பிரதமரும் அவரது அலுவலகமும் நேரடியாக நிர்வகிக்கும் இந்த நிதியின் விவரங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. தகவல் அறியும் கோரிக்கைகளின் மீது தகவல்களை வழங்க பிரதமர்அலுவலகமும் தயங்குகிறது.
பிஎம் கேர்ஸ் நிதி அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் ரூ.9,678 கோடி திரட்டப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலையில் நிவாரணம் (பி.எம். கேர்ஸ்) கடந்த ஆண்டு மார்ச் 28 அன்று அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் என்ற பெயரில் கோவிட் நன்கொடைகளை சேகரிக்கத் தொடங்கினர். இந்தியா ஸ்பென்ட் என்ற செய்தி வலைத்தளத்தின் தகவல்படி, இந்த நிதி 52 நாட்களில் ரூ.9,678 கோடியை எட்டியுள்ளது. கூடுதலாக, ரூ.2,098கோடிக்கான வாக்குறுதிகள் இருந்தன.
கடந்த ஆண்டு மே மாதம்வரை இந்த சிறப்பு நிதி சுமார் ரூ.10,600 கோடியை எட்டியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி, பிரதமர் அலுவலகம், பி.எம் கேர்ஸில் இருந்து ரூ.3,100 கோடி கோவிட் முன்னணி பாதுகாப்பு ஆர்வலர்களுக்காக செலவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் செலவு குறித்த வேறு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நிறுவனங்கள்மற்றும் ஊழியர்களிடமிருந்து மத்தியில் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் நன்கொடைகளை சேகரிக்க பணிக்கப்பட்டன. தினக்கூலி தொழிலாளர்கள்கூட தங்களது ஊதியத்தை வழங்கினர்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிஎம் கேர்ஸ் வருவாய் மற்றும் செலவு குறித்த தகவல்கள் தேவையில்லை என்று பிரதமர் கருதுகிறார். கருவூலத்தில் இருந்து இந்த பணம்இல்லை என்ற அடிப்படையில் சிஏஜி ஆய்வுக்கு தடை விதித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பின்பற்றக்கூடாது என்றும் அவர்பணித்தார். தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின் படி பிரதமரின் பராமரிப்பு ஆவணங்கள் யாரிடமும் ஒப்படைக்கப்பட வேண்டியதில்லை என்று தகவல் அறியும் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தகவலும் நாடாளுமன்றத்திற்கும் வழங்கப்படாது.
பிரதமரின் நிவாரண நிதியம் (பிஎம்ஆர்எப்) அவசரநிலைகள் மற்றும் பேரழிவுகளைச் சமாளிப்பதற்கும், துன்பத்தில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் உள்ளது., 2019 டிசம்பர் 31 நிலவரப்படி இதில்ரூ.3,800 கோடி உபரி இருந்தது. இருந்த போதிலும், கோவிட் நிதியை தனியாக உருவாக்கியதற்காக விமர்சிக்கப்பட்டார். சிஏஜி ஆய்வைத் தவிர்ப்பதற்காக நிதியின் அமைப்பு தனிப்பட்ட முறையில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.