india

img

ராணுவப் பாடத் திட்டத்தில் பகவத் கீதை, அர்த்த சாஸ்திரம்? மோடி அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்...

புதுதில்லி:
ராணுவப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் அர்த்த சாஸ்திரத்தை இணைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் முப்படைகளின் ராணுவ பயிற்சிக்கான பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி உள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற பலர் ராணுவம், விமானம், கடற்படையில் முக்கிய பொறுப்புவகிக்கின்றனர். 

இந்நிலையில், செகந்திராபாத் ராணுவப் பயிற்சி கல்லூரியில் அண்மையில் ஆய்வுஒன்று மேற்கொள்ளப்பட்டுள் ளது. பகவத் கீதை, அர்த்தசாஸ்திரம் போன்ற நூல் களில் கூறப்பட்டுள்ள போர் யுத்திகளை தற்போதைய ராணுவத்தில் பயன்படுத்த வாய்ப்புள் ளதா? என்பதுதான் அந்த ஆய்வாகும். இந்திய கலாச்சார ஆய்வு மன்றம் என்ற அமைப்பின் பெயரில் இதனைநடத்தி, பகவத் கீதை, அர்த்தசாஸ்திரத்தை பாடத்திட்டத் தில் இணைக்குமாறு தற் போது பரிந்துரையும் செய் யப்பட்டுள்ளது.
இதனைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே. மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். “கீதை மற்றும் அர்த்தசாஸ்திரத்தை ராணுவ பயிற்சிக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கும் திட்டமுன்மொழிவை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ள மிஸ்ரா, “குறைந்தபட்சம் ராணுவ விஷயங்களிலாவது அரசியல் செய்யாமல் இருக்கலாம். இஸ்லாமிய மதத்தை சார்ந்த ராணுவவீரர்களின் துணையுடன் தான் கார்கில் போரை வென் றோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.