புதுதில்லி:
“விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய் யும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை” என்று ஒன்றிய பாஜக அரசு கைவிரித்துள்ளது.
விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா? என்று நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதித் துறை இணையமைச்சரான பகவத் காரத் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார்.அதில்தான், “கடந்த 2008-ஆம்ஆண்டுக்குப் பிறகு விவசாயக்கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவா ரணத் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை. எனவே, இனிமேலும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் அரசுக்குஇல்லை” என்று தெரிவித்துள் ளார். பட்டியல் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விவசாயிகளாக இருந்தாலும் அவர்களுக் கும் கடன் தள்ளுபடி வழங்கப்படாது” என பகவத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.அதே நேரம், “விவசாயிகளின்கடன் சுமையைக் குறைக்க ரிசர்வ் வங்கியுடன் (RBI) இணைந்து பல்வேறு திட்டங்களை ஒன் றிய அரசு செயல்படுத்தி வருகிறது. ரூ. 3 லட்சம் வரையிலானகுறுகியகால பயிர்க் கடன்களுக்கு வட்டித் தள்ளுபடி அளிக் கும் திட்டம் நடை முறையில் உள்ளது. விவசாயிகளுக்கு எவ்வித பிடிமானமும் இல்லாமல் வழங்கப்படும் கடன் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 1.6 லட்சமாக ஆா்பிஐ உயா்த்தியுள்ளது. விவசாயிகளுக்கான பிரதமா் நிதி உதவித் திட்டத்தில் ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது” என்றும் பகவத் காரத் சமாளித்துள்ளார்.