புதுதில்லி:
பெண்கள் சுயஉதவிக் குழுவினர்கள், தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (DAY-NRLM) கீழ் உருவாக்கப் பட்ட சமுதாய சேவையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான தற்சார்பு பெண்கள் அமைப்பினருடன் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 12) கலந்துரை யாடுகிறார்.இதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1625 கோடி அளவில் மூலதன நிதி உதவியையும் பிரதமர் விடுவிக்கிறார். மேலும், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின், பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் (PMFME), சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 7,500 பேருக்கு ரூ.25 கோடியை முதலீட்டு பணமாகவும் தேசிய ஊரகவாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட 75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.4.13 கோடி நிதியையும் பிரதமர் விடுவிக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினரின் வெற்றி கதைகளின் தொகுப்பு மற்றும் விவசாய வாழ்வாதாரங்கள் குறித்த கையேட்டை பிரதமர் வெளியிடுகிறார்.