india

img

கரும்புக்கு இந்தியாவை விட நேபாளத்தில் கூடுதல் விலை.... படையெடுக்கும் பீகார் மாநில விவசாயிகள்....

பாட்னா:
இந்தியாவைக் காட்டிலும், நேபாளத்தில் கரும்புக்கு கூடுதல் விலை கிடைப்பதால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் நேபாளத்தை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

நேபாளத்தில், ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ. 215 விலை கிடைக்கிறது. ஆனால், பீகாரில், இடைத்தரகர்கள் மூலம் கரும்பு விற்கப்படுவதால், ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ. 180 என்ற அளவிலேயே விலை கிடைக்கிறது. அதுமட்டுமன்றி, பீகாரின் சித்தமர்ஹி பகுதியில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள், பல நிர்வாக குளறுபடிகளால் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பீகார் மாநிலகரும்பு விவசாயிகள், தாங்கள் விளைவித்த கரும்பை அருகிலிருக்கும் நேபாளத்திற்கு கொண்டு செல்லத் துவங்கியுள்ளனர். நேபாளத்தில் கரும்பை விற்பனை செய்வது, தங்களுக்கு லாபகரமாக உள்ளது என்றும்பீகார் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.நேபாளம், இந்தியாவுடன் 1700 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அதில், பீகாருடன் மட்டும் 720 கி.மீ. நீள எல்லைப் பகிரப்படுகிறது. கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்த இந்திய – நேபாள எல்லை, கடந்தபிப்ரவரியில்தான் மீண்டும் திறக்கப் பட்டது.இதன்மூலம், நேபாள எல்லையையொட்டிய பீகார் கரும்பு விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பிறந்துள் ளது.