india

img

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பீகார் சட்டமன்றத்தில் இடதுசாரி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்....

பாட்னா:
பீகார் சட்டமன்றத்தின் முதல்நாள் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் நாட்டில் போராடிக்  கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் பட்டது.

பீகார் சட்டமன்றக் கூட்டத்தொடர்  வெள்ளியன்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே, சட்டமன்றத்தின் பிரதானகட்டிடத்திற்கு முன்பு நின்று, இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 16 பேரும்(சிபிஐ-எம்எல் 12, சிபிஎம்-2, சிபிஐ-2) வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம்செய்தார்கள்.மேலும், ஒருவாரத்திற்கு முன்பு, முசாபர்பூர் மாவட்டத்தில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடைபெற்றது  தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையினருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இவ்வாறு தாக்குதல் தொடுத்தவர்கள், விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பின்னர் இடதுசாரிக் கட்சியைச்சேர்ந்த உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டமன் றத்திற்குள்ளும் கிளர்ச்சியில் ஈடுபடவிருப்பதாகவும், பிரச்சனையை விவாதிப்பதற்காக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.            (ந.நி.)