articles

img

போராடும் விவசாயிகளுக்கு அதிகரிக்கும் மக்களின் ஆதரவு....

தலைநகர் தில்லியில், எல்லைப் பகுதிகளில் போராடும் விவசாயிகள் தங்கியிருக்கும் இடங்களில், மத்திய பாஜக மோடி-அமித்ஷா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு எதிராக எந்த அளவிற்கு மிகவும் பகைமை பாராட்டும்விதத்தில் நடந்துகொண்டு வருகிறது என்பதைக் காட்டுகின்றன. போராடும் விவசாயிகளைச் சுற்றிலும் தில்லிக்காவல் துறையினர், பல்வகைப்பட்ட தடுப்பரண்களை வைத்திருக்கின்றனர். போராடும் விவசாயிகளைப் பார்ப்ப
தற்காகப் பொதுவாக எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. விவசாயிகளுக்குத் தேவையான துப்புரவு வசதிகள், கழிப்பிட வசதிகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. இணைய வழி தொடர்பும்கூட துண்டிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் மற்றும் விவசாயவிரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் தரப்பில் பல்வேறுவிதமான தடுப்பரண்கள் வைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் கறுப்புச் சட்டங்களான வேளாண் சட்டங்களை ரத்துசெய்திடும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று உறுதியுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் தன் பகைமைத் தீயை விசிறிவிட விசிறிவிட, அது போராடும் விவசாயிகளை மேலும் மேலும்உருக்குப் போன்று பதப்படுத்திக் கொண்டிருக்கிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருக்கின்ற கிராமங்களில் உள்ள மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. போராடும் விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் பகைமை காட்டும் அதே சமயத்தில் இக்கிராம மக்கள் போராடும் விவசாயிகளுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் உணவுப் பொருள்கள், கழிப்பிட வசதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள மனமுவந்துஉதவி வருகிறார்கள். இது மட்டுமல்ல, தாங்களும் போராடும் விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.நியுஸ்கிளிக் இணைய இதழைச் சேர்ந்த செய்தியாளர்கள், திக்ரி, காசிபூர், சிங்கூ எல்லைகளிலும், பல்வால்மற்றும் ஷாஜஹான்பூர் கிளர்ச்சி மையங்களுக்கும் சென்று செய்திகளைச் சேகரித்துப் பதிவு செய்திருக்கிறார்கள்.அவற்றைக் கீழே தருகிறோம்:

 தாமாகவே முன்வந்து ஆதரவு
“எந்த அளவுக்கு அரசாங்கம் எங்களை மிரட்டுகிறதோ,அந்த அளவுக்கு எங்கள் இயக்கமும் வலுவாக மாறும்.”இது, திக்ரி எல்லையில் போராடும் விவசாயிகளின்கூற்றாகும். இங்கே சென்ற ஆண்டு நவம்பரிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே தில்லிக் காவல்துறையினர் தங்கள் பாதுகாப்பை மேலும் மேலும் அதிகரிக்கத் தொடங்கியபின்னர் இங்குள்ள விவசாயிகளின் மத்தியில் போராட்ட உணர்வும் உருக்குபோன்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பது தெளிவாகவே தெரிகிறது.மஞ்சள் வண்ண தடை அரண்கள்தான் பொதுவாக காவல்துறையினரால் வைக்கப்படும். இப்போது அவற்றுடன் கருங்கற்கள், பெரிய கற்பாறைகள், கூர்மையான கம்பிகளுடன் கூடிய வலைக் கம்பிகள், பெரிய ஆணிகள்,பாரந்தூக்கும் கிரேன்கள், கப்பல் கொள்கலன்கள் முதலானவையும் இங்கே பாதுகாப்புப் பணிக்காக கொண்டுவரப்பட்டிருக்கின்றன. குடியரசு தினத்தன்று நடைபெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து இவை அத்தியா
வசியமானவைகளாக மாறியிருப்பதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.“திக்ரியில் இணைய வழித் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. போராடும் விவசாயிகள் பயன்படுத்துவதற்காகவைக்கப்பட்டிருந்த தற்காலிக கழிப்பிட வசதிகள் காலிசெய்யப்பட்டுவிட்டன. ஜனவரி 26க்குப் பின்னர் மாநகராட்சிதுப்புரவு ஊழியர்கள் வராததால், குப்பைகள் மலைபோல்குவிந்து கொண்டிருக்கின்றன. காவல்துறையினரும் இப்பகுதிக்கு உணவுப் பொருள்கள் மற்றும் தண்ணீர் டாங்குகள் வருவதற்கு அனுமதிப்பதில்லை.” என்று பஞ்சாப்பின் முக்தார் சாகிப்பிலிருந்து வந்துள்ள 45 வயதுகுர்பிரீத் சிங் கூறினார்.

“எனினும், ஹரியானா மற்றும் உள்ளூர் மக்கள் தாமாகவே முன்வந்து, எங்கள் போராட்டத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். போலீசாரின் கெடுபிடி அதிகரித்ததைத் தொடர்ந்து இவர்கள் தாமாகவே உதவிட ஓடோடி வந்திருக்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார். போலீசாரின் கெடுபிடி அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளும் தங்கள் போராட்ட வைராக்கியத்தை அதிகரித்திருப்பதை, அவர்களை உற்றுநோக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. எது வந்தாலும் அவர்களைப் பணியவைத்திட முடியாது என்பது நன்கு தெரிகிறது.“எங்களைப் போலீசார் மிரட்டத் தொடங்கியதிலிருந்தே, உள்ளூர் மக்களும் எங்களுக்கு அளித்துவரும் ஆதரவை அதிகப்படுத்தி இருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது. இங்கேயுள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள், தங்கள் சொந்த மின் இணைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள எங்களை அனுமதித்துள்ளார்கள். தங்கள் வீடுகளில் உள்ள கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் எங்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்,” என்று பாரதிய கிசான் யூனியன் (மான்சா)துணைத் தலைவர் மேஜர் சிங் ரந்தாவா கூறினார்.

பெண்களும் முதியவர்களும் படும் சிரமங்கள்
“போலீசார் சமீபத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் சிரமங்களைக் கொடுத்திருக்கின்றன,” என்று ஹரியானாவில் ஹிஸ்ஸார்மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருமதி சுதேஷ்கோயாட் என்பவர் கூறினார். “ஆனாலும், உள்ளூர் மக்கள் பெண்களாகிய எங்களை, அவர்களுடைய கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்து, எங்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் நாங்கள்காலையில் குளிப்பதற்காக வெந்நீர் ஏற்பாடும் செய்து தருகிறார்கள்,” என்றும் கூறினார்.அசோக் குமார் (வயது 45), விவசாயிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர், தற்போது அவர் விவசாயிகள் போராடிவரும் இடத்தில் சொந்தமாகக் கடை வைத்திருக்கிறார். அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளால்இங்கேயிருக்கும் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது விவசாயிகளும் அதனை நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் விவசாயிகள் தங்களுக்கு எதுவந்ததோ அதைப் பெற்றுக்கொண்டு திருப்திஅடைந்தார்கள். ஆனால் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபின், அவ்வாறு தங்களுக்கு எதுவும் வராது என்பதைஅவர்கள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள். எனவேதான்அவர்கள் உறுதியுடன் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூர் மக்களாகிய நாங்களும் அதனை உணர்ந்து எங்களாலான அனைத்து உதவிகளையும் அவர்களுக்குச் செய்து வருகிறோம்,” என்று கூறினார். “இதனை நாங்கள் செய்கிறோம், ஏனெனில் போராடும்விவசாயிகளின் பக்கத்தில் நிற்க வேண்டியது எங்கள் கடமை என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்,” என்று அவர்மேலும் கூறினார்.

அத்தியாவசியப் பொருட்களும் இணையத் தொடர்பும்
பிப்ரவரி 3 புதன்கிழமையன்று, ஹரியானா மாநிலத்திலுள்ள கிராமங்களிலிருந்து திக்ரி நோக்கி வரும் டிராக்டர்களின் வருகையில் எவ்விதக் குறுக்கீடும் இல்லாமல் தொடர்ந்தன. இவர்களில் 60 வயது ஷீலா தேவி என்பவர்ஹிசார் மாவட்டத்திலிருந்து சுமார் 150 ஆண்கள்- பெண்களுடன் வந்திருந்தார். இவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒவ்வொரு வாரமும் நாங்கள் இங்கே வருகிறோம். வரும்போது விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுவருகிறோம். விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரேசன்பொருள்களை போலீசார் நிறுத்திவிட்டனர் என்று கேள்விப்பட்டோம். எனவே, இந்தத் தடவை நாங்கள்100 லிட்டர் பால், லஸ்ஸி, ஒரு தண்ணீர் டாங்கர் மற்றும் சுமார் 100 மெத்தைகளைக் கொண்டுவந்திருக்கிறோம்,” என்றார்.நிதி எப்படி ஏற்பாடு செய்தீர்கள் என்று கேட்டபோது, ரஜ்பீர் ஷர்மா (35), “எங்கள் பஞ்சாயத்தில் நன்கொடை விகிதத்தை நிர்ணயம் செய்திருக்கிறோம். நிலம் வைத்துள்ள விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு 200 ரூபாய் வீதம் நன்கொடை அளித்திட வேண்டும். நிலமற்ற குடும்பத்தினரிடமிருந்து மொத்தத்தில் 200 ரூபாய் நன்கொடைவசூலித்திருக்கிறோம். ஊதியம் பெறும் குடும்பத்தினர் 5,100 ரூபாய் அளித்திட வேண்டும்,” என்று கூறினார்.“இந்த வகையில், சுமார் 10-20 லட்சம் ரூபாய் எங்களுடைய ஒரு கிராமத்திலிருந்து மட்டும் வசூல் செய்திருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் தரப்பில் இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் போராடும் விவசாயிகள் தங்கள் தொடர்பினை பல வழிகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.அனூப் சிங் என்பவர் “கிசான் சமூக சேனை” (“KisanSocial Army”) என்னும் ஊடக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், திக்ரி எல்லையில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இவர், அரசாங்கம் இணைய தொடர்புகளைத் துண்டித்திருப்பதைக் கண்டு தவித்தபோதிலும், பின்னர் அதனை முறியடித்திடும் விதத்தில் பல்வேறு வழிவகைகளைக் கண்டிருக்கிறார். “எங்களில் சிலர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்தில்லியை நோக்கி நடந்துசென்று, இணையத் தொடர்பைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்,” என்றார். பஞ்சாப்-ஹரியானாவிலிருந்து வந்துள்ள 90 பேர், வாட்சப் குழுக்கள் ஏற்படுத்தி, தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்படி என்ன தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, பொய்ச் செய்திகள்எங்கள் போராட்டத்தை முடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்றும், குறிப்பாக தற்போது ஜனவரி 6 அன்றுநடைபெறவுள்ள சாலை மறியல் (chakka jam) எவ்விதத்திலும் பாதிக்கப்படாது அமைதியாக நடைபெறுவதற்கானநடவடிக்கைகளை இதன்மூலம் எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.திக்ரி எல்லைப்பகுதியிலிருந்து ரோனாக் சப்ரா மற்றும்பகதூர்கார்

தில்லியிலிருந்து ... 
 

தமிழில் : ச.வீரமணி