india

img

அனுராக் தாக்கூரை தொடர்ந்து மற்றொரு பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!

பாஜக எம்.பி அனுராக் தாக்கூரை தொடர்ந்து பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சின் சவுகான், ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

போபாலில் உள்ள இந்திய அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது. இன்று நம்மிடம் உள்ள ட்ரோன்கள், ஏவுகணைகளை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் வைத்திருந்தோம். இதை நாம் மகாபாரதத்தில் படித்திருக்கிறோம்” என பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில், ஒன்றில் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், “முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன் தான் நீல் ஆம்ஸ்ட்ராங் இல்லை” என்று பேசியது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.