திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்து, அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லின் குடைபாறைபட்டியில் இந்து அமைப்புகள் சார்பில் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் தடை விதித்து. இந்த நிலையில், போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை வைத்தது மட்டுமல்லாமல், விநாயகர் சிலையை இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பேகம்பூர் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்ற 40க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமே விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்த நிலையில், தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.