tamilnadu

img

காசாவில் பத்திரிகையாளர்கள் படுகொலை இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்!

காசாவில் பத்திரிகையாளர்கள் படுகொலை  இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்!

புதுதில்லி, ஆக. 27 - காசாவின் கான் யூனிஸில் உள்ள அல்-நாசர் மருத்துவமனை மீது குண்டுவீசி, 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேரை திங்கட்கிழமையன்று இஸ்ரேல் படுகொலை செய்தது. இஸ்ரேல் தாக்குதலில், ராய்ட்டர்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் ஹுசாம் அல்-மஸ்ரி, அல்-ஜசீரா புகைப்பட பத்திரி கையாளர் முகமது சலாமா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங் களுக்கு செய்தி வெளியிட்ட 33 வயதான பெண் பத்திரிகையாளர் மரியம் அபு  தாஹா, என்பிசி நெட்வொர்க் பத்திரி கையாளர் முவாஸ் அபு தாஹா மற்றும் குட்ஸ் பீட் நிருபர் அகமது அபு அஜீஸ் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா மருத்துவமனைகளில் மருந்து கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து செய்தி சேகரிக்கும் போது இவர்களை இஸ்ரேல் குண்டுவீசி கொலை செய்துள்ளது. காசா மீது கடந்த 22 மாதங்களாக நடத்தி வரும் போரில், பத்திரிகையாளர் கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப் படுகிறது. இதற்காக, இஸ்ரேலுக்கு சர்வ தேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா, அதிர்ச்சியையும் வேதனை யையும் தெரிவித்துள்ளது. “பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டது அதிர்ச்சியளிக்கிறது; இது மிகவும் வருந்தத்தக்கது. மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பதை இந்தியா எப்போதும் கண்டித்து வருகிறது. இஸ்ரேலிய அதி காரிகள் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று வெளி யுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறி யுள்ளார். அதேபோல, பத்திரிகை யாளர்களை குண்டுவீசி கொலை செய்த தற்கு விளக்கம் கேட்டு, இஸ்ரேலுக்கு அசோ சியேட் பிரஸ், ராய்ட்டர்ஸ் நிறுவனங்கள் ஆகிய சர்வதேச ஊடகங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. “சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் பட்ட இடமான மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் சுயாதீன பத்திரிகையாளர்களும் அடங்குவர்  என்பது எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த பத்திரிகையா ளர்கள் தங்கள் தொழில்முறை பணிக்காக மருத்துவமனையில் இருந்த னர். காசாவிற்குள் வெளிநாட்டு பத்திரிகை யாளர்கள் நுழைவதற்கு இஸ்ரேல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், 5 பேரின் பணி மிகவும் முக்கியமானது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 65 ஆயி ரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்க ளை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. இவர்களில் பத்திரிகையாளர்கள் எண்ணி க்கை 192 என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள் ளது.