அசாம் பாஜக அரசைக் கண்டித்து தில்லியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
புகழ்பெற்ற பத்திரிகையாளர்களான கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் ஆகியோரைப் பழிவாங்கும் நோக்கத்துடன் அவர்கள் மீது தேசத்துரோக பொய்க்குற்றச்சாட்டை சுமத்தி, வழக்கு பதிவு செய்துள்ள அசாம் பாஜக அரசைக் கண்டித்து, புதுதில்லியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தில்லி பத்திரிகையாளர் சங்கத் தலைவர் எஸ்.கே. பாந்தே, செயலாளர் ஜிகேஷ், ‘தி வயர்’ துணையாசிரியர் சங்கீதா, ‘தீக்கதிர்’ சார்பில் வெளியீட்டாளர் என். பாண்டி, ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், எண்மப் பதிப்பு ஆசிரியர் எம். கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.