வடமாநிலங்களைத் தொடர்ந்து தெலுங்கானா விலும் கனமழை வெளுத்து வாங்கி வரு கிறது. ராஜம் பேட்டை, காமரெட்டி உள்ளிட்ட இடங்க ளில் குறிப்பிட்ட நேரத்தில் 40 மி.மீ., அளவிற்கு அதி கமான அளவில் கனமழை பெய்துள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
கேரளாவில் சாப்ட்வேர் இன்ஜினியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக் கும் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்படும் நிலையில், அவர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா - சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லை யில் புதன்கிழமை அன்று 4 நக்சல்கள் பாது காப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.