ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
பீகாரில் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வழங்குவதன் மூலம் பாஜக கூட்டணி அரசு ரூ.4,000 கோடி அளவில் ஊழல் செய்துள்ளது. ஊழல் செய்துள்ள பணம் அனைத்தும் பாஜகவிற்கு நன்கொடையாக சென்றுள்ளது. தேர்தல் பத்திரத்திற்கு மாற்றான ஊழல் என்று கூட இதனை கூறலாம்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜீ
தேர்தல் வரும்போதெல்லாம் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும் என்கிறீர்கள். தேர்தல் ஆணையமே! தயவுசெய்து பாஜக கேட்கும் கோரிக்கைகளுக்கெல்லாம் தலையாட்டும் அவர்களது லாலிபாப் (குச்சியின் நுனியில் இருக்கும் கடினமான மிட்டாய்) ஆக இருக்காதீர்கள்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது. ‘ஹவுடி மோடி’ போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் மூலம் மோடி, டிரம்புடன் தனிப்பட்ட நட்புறவைப் பேண முயன்ற போதிலும், அது இந்தியாவிற்கு எந்தப் பலனையும் தரவில்லை. வரி தான் கிடைக்கிறது.
திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்
குடிமக்களுக்கும், இந்தியப் பிரதமருக்கும் பொது அறிவிப்பு மூலம் ஒன்றை கூற விரும்புகிறேன். நான் பிரகாஷ் ராஜ். நான் பட்டம் பெற்றவன் அல்ல. எனது படைப்பு வாழ்க்கையைத் தொடர பட்டப்படிப்பை நிறுத்திவிட்டேன். நான் அதைப் பற்றி வெட்கப்படவில்லை. நான் அதை மறைக்கவும் விரும்பவில்லை.