முந்திரி ஆலைத் தொழிலாளர்களுக்கு ரூ.2,250 கருணைத் தொகையுடன் அரிசி
கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கி யுள்ளன. ஒவ்வொரு நாளும் அம்மாநில மக்களுக்கு கருணைத் தொகை, நிவாரணம் என பல்வேறு பரிசு களை கேரள அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கேரளத்தில் மூடப்பட்ட முந்திரி ஆலைத் தொழிலாளர்களுக்கு மாநில அரசிடமிருந்து ஓணம் நிவார ணமாக தலா ரூ.2,250 கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”முந்திரி ஆலைத் தொழி லாளர்களுக்கு தலா ரூ.250 மதிப்புள்ள அரிசியும் விநியோகிக்கப்படும். 425 தொழிற்சாலைகளில் உள்ள 13,835 தொழிலாளர்கள் இதன் மூலம் பயன டைவார்கள். இதற்காக ரூ.3.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.