சென்னைக்கு உதவிக்கரம் நீட்டிய சேலம்-ஈரோடு
சென்னை, டிச.6- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு சேலம்- ஈரோடு மாவட்ட நிர்வாகங்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.
அதன்படி சேலம் மாவட்ட நிர்வா கம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விடிய விடிய 5,000 பைகளில் நிவாரண பொருட்கள் நிரப்பப்பட்டு லாரி மூலம் சென் னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல் ஈரோடு மாவட்ட நிர்வாகம் தரப்பில் முதற்கட்டமாக போர்வை, பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை லாரி மூலம் சென் னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
23 அடியை தாண்டிய செம்பரம்பாக்கம் ஏரி
சென்னை, டிச.6 - 24 அடி உயரம் கொண்ட செம்ப ரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 8 ஆண்டு களுக்கு பிறகு 23 அடியாக உயர்ந்தி ருந்தது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நீர்மட்டம் 23 அடியை தாண்டி இருப் பது இதுவே முதல்முறையாகும்
அமைச்சர் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலை யில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செம்பரம்பாக் கம் ஏரியில் நீர் இருப்பு, வரத்து உள் ளிட்டவை குறித்து அமைச்சர் துரை முருகனிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மீட்புப் பணிக்கு 125 வீரர்கள் வருகை
சென்னை, டிச.6 - புயல் மீட்புப் பணிகளுக்காக விஜயவாடாவில் இருந்து 5 குழுவைச் சேர்ந்த 125 வீரர்கள் தமிழ்நாடு வருகை தந்துள்ளனர்.
விஜயவாடாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 2 குழுக்கள் வேளச்சேரி, பள்ளிக்கரணையில் மீட்புப்பணிக்கு விரைந்தனர். மீதியுள்ள 3 குழுக்கள் சென்னையின் மற்ற பகுதிகளில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
புயல் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்
நில அளவை அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை, டிச. 6- மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு தனது சங்க உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறி வித்துள்ளது.
இதுகுறித்து தலைவர் ஜெ.ராஜா, பொதுச் செயலாளர் அண்ணா. குபேரன், பொருளாளர் ஞா. ஸ்டேன்லி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
மிக்ஜம் புயலால் சென்னை தலை நகர் வெள்ளக்காடாக மாறியிருக்கி றது. தமிழ் நாடு அரசு மக்கள் நலனுக் காக பல்வேறு பணிகளை முன்னெ டுத்து உள்ளது. அரசுக்கு உறுதுணை யாக அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசு ஊழியர்கள் அனைவரும் களத்தில் இறங்கி மக்களை காக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் கடும் பணி மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் மக்களுக்கு பிரச்சனை என்றால் உடனே ஓடோடி வந்து தொண்டாற்றும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு இது மட்டும் போதாது என்று உணர்ந்து தமது உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை வெள்ள நிவாரண பணி மேற்கொள்ள தமிழ்நாடு முதல மைச்சர் நிவாரண நிதிக்காக வழங்குவ தாக முடிவெடுத்துள்ளது. ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யக் கோரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநர் ஆகி யோருக்கு கடிதம் வழங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கி றோம்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கியது
சென்னை, டிச.6- “மிக்ஜம்” புயல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை புறநகர் பகுதி களுக்கு மின்சார ரயில் சேவை தொடங்கியது
“மிக்ஜம்” புயல் காரணமாக சென்னையில் ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்களில் அபாய அளவை தாண்டி மழைநீர் தேங்கிய தால் கடந்த 2 நாட்களாக சென்னை புற நகர் மின்சார ரயில் சேவை முற்றி லும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் துரித நிவாரண நடவடிக்கை காரணமாக புதனன்று சென்னை மூர்மார்க்கெட் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் வழித் தடத்தில் 1 மணி நேர கால இடைவெளி யில் மின்சார ரயில்கள் இயக்கப் பட்டன. சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்வ தற்கு 30 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், கடற்கரை - திருவள்ளூர், அரக்கோ ணம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே 30 நிமிடங்க ளுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.
இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, டிச.6 - மழை வெள்ள பாதிப்பு கள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடை பெற்று வரும் நிலையில், நான்காவது நாளாக (டிச.7) சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையை முழுவ தும் புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது மிக்ஜம் புயல். சென்னையின் முக்கிய சாலைகளிலும் கூட இன்னும் மழை நீர் முற்றிலும் வடியாத நிலை யில், திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், வியாழக் கிழமை(டிச.7) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப் பட்டுள்ளது. மழை சற்று ஓய்ந்துள்ளது. இருந்த போதும், அடுத்த 3 மணி நேரத்திற்கு மீண்டும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத் தியுள்ளது.
பல பகுதிகளிலும் இன்னும் மின்விநியோகம் சீராக்கப்படாத நிலையில், சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக் கிழமையும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப் பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இந்த 4 மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் இந்த கல்லூரி களுக்கு வருகிற டிச. 10 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கு டிச.11 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் கல்லூரிகளின் விடுதிகளில் படித்து வரும் மாணவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விடுமுறை குறித்த அறிவிப்பு கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவித்துள்ள னர். மேலும் பல கல்லூரி கள் நிவாரண முகாமாக இயங்கி வருவதால் கல்லூரி களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிக்கு வந்தவர் விபத்தில் பலி
ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிதியுதவி
சென்னை, டிச.6 - மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்கு சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும் பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியு தவி முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப் பில், மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணியை மேற் கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியைச் சேர்ந்த சுகா தார அலுவலர் ஜெயபால் மூர்த்தி சென்னைக்கு வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயர மான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந் தேன்.
இந்த விபத்தில் உயிரி ழந்த ஜெயபால் மூர்த்தி குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்கள் ளுக்கும் எனது ஆறுதலை யும், ஆழ்ந்த இரங்கலை யும் தெரிவித்துக் கொள்வ தோடு, அவரது குடும்பத் திற்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தர விட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு உடனடி யாக அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் முருகானந் தத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.