தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடப்பது என்ன?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சி
புதுதில்லி, மார்ச் 10- தலைமைத் தேர்தல் ஆணை யத்திற்குள்ளேயே ஏற்பட்டிருக்கும் நிகழ்ச்சிப்போக்குகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுதில்லி, மார்ச் 10- தலைமைத் தேர்தல் ஆணை யத்திற்குள்ளேயே ஏற்பட்டிருக்கும் நிகழ்ச்சிப்போக்குகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் ஆணையர்களில் ஒருவர், இன்னும் ஓய்வு பெற மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், திடீ ரென ராஜினாமா செய்திருக்கிறார். அந்த ராஜினாமாவும் உடனே முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டி ருக்கிறது. தேர்தல் ஆணையர் களில் ஒருவரின் இடம் ஏற்கனவே காலியாகவுள்ள நிலையில், இப் போது இவருடைய ராஜினாமா கார ணமாக தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டும் தேர்தல் ஆணை யத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது.
18ஆவது மக்களவைக்கான தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலை யில், இது ஒரு நிச்சயமற்ற தன்மை யை உருவாக்கி இருக்கிறது. தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்தி டும் புதிய சட்டத்தின்படி, தேர்தல் ஆணையத்தை நிரப்பும் பணி அர சாங்கத்தின் முழு கட்டுப்பாட்டிற் குள் இருக்கிறது. இது, அரசமைப்புச் சட்டத்தின் நம்பகத்தன்மையை உத்தரவாதப்படுத்திட வேண்டியதன் தேவை குறித்தும், அதன் திறனை வலுப்படுத்தவேண்டியதன் அவ சியம் குறித்தும் ஆழ்ந்த கவலையை எழுப்பியிருக்கிறது.
இத்தகு சூழ்நிலை எவ்வாறு உரு வானது என்பது குறித்து ஒன்றிய அர சாங்கம் ஒரு தெளிவான அறிக்கை யைத் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது. (ந.நி.)
புதுதில்லி
மோடி தலைமையில் தேர்வுக் கூட்டம்
தேர்தல் ஆணையர்களைத் தேர்ந் தெடுப்பதற்கான பிரதமர் தலைமை யிலான உயர்மட்டக் குழுக் கூட்டம் மார்ச் 14 அல்லது 15-ஆம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக நடைபெற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.