india

பிரசார் பாரதியில் 25,188 பணியிடம் நிரப்ப பரிந்துரை

புதுதில்லி,மார்ச் 22- தொலைத்தொடர்பு - தகவல் தொழில்நுட்பத் திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்டுள்ள 34 ஆவது ‘மானியங்களுக்கான கோரிக்கை’ அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ‘பிரசார் பாரதியில் தற்போது 25,188 பணியிடங்கள் காலியாக உள்ளன. தூர்தர்ஷனில் 9,869 இடங்களும், அகில இந்திய வானொலியில் 15,319 இடங்களும் காலியாக உள்ளன. ஆட்கள் பற்றாக்குறையால் அமைப்பும் அதன் செயல்திறனும் பாதிக்கப்படாமல் இருக்க, பிரசார் பாரதியில் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்கிறோம்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.