india

img

தேர்தலையொட்டி பயணிகள் ரயில் கட்டணம் குறைப்பு!

மக்களவை தேர்தலையொட்டி பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கோவிட் காலத்தில் பயணிகள் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்கள் எனப் பெயர் மாற்றி, ஒன்றிய பாஜக அரசு ரயில் கட்டணங்களை உயர்த்தியது. இதனால் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் எளிய மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இப்பிரச்சனை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். இந்த நிலையில், ஏற்கனவே உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில்களில் கட்டணம், தற்போது தேர்தலையொட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ரயில் கட்டணம் ரூ.30-இல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
200 கிலோமீட்டருக்கு அதிகமான நீண்ட தூரம் செல்லும் பயணிகள் ரயில்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் தற்போது குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.