india

நோட்டீஸ்... மோடிக்கு அல்ல, கட்சிக்கு!

புதுதில்லி, ஏப். 25- ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் மக்கள் குறித்து பிரதமர் மோடி அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப் பட்ட புகார் குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் பாஜக-வுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவதூறு பேச்சுகளுக்கு தனிநபர்களுக்கே நேரடி யாக நோட்டீஸ் அனுப்பப்படும். ஆனால், பிர தமர் மோடியைப் பாதுகாப்பதற்காக- புதிய நடைமுறையைக் கையில் எடுத்துள்ளது. அதாவது, அவரது கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியிருக்கிறது.

அதே நேரம் பாஜக அளித்த புகாரின் பேரில், ராகுல் காந்திக்கு மட்டும் நேரடியாக நோட்டீஸ் அனுப் பினால், அது கேள்விக்கு உள்ளாகும் என்ப தற்காக, காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரிவினை யைத் தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி மீது பாஜக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த தேர்தல்  ஆணையம் கார்கேவுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.