india

img

ஒடிசா : பொனாய் சட்டசபைத் தொகுதியில் லட்சுமண் முண்டா (சிபிஎம்) ஹாட்ரிக் வெற்றி

புவனேஸ்வர், ஜுன் 4- ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பொனாய் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமண் முண்டா மூன்றாவது முறையாக (ஹாட்ரிக்) மீண்டும் வெற்றி பெற்றார்.

ஒடிசாவின் பொனாய் சட்டமன்றத் தொகுதி யில் சிபிஐ-எம் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இன்னும் 5 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், சிட்டிங் எம்எல்ஏ லட்சுமண் முண்டா 19,825 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பிஜேடியின் பீம்சென் சவுத்ரியை லட்சுமண் முண்டா தோற்கடித்தார்.

வேட்புமனு தாக்கல் தொடங்கி, முண்டா வுக்கு ஆதரவாக அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் செங்கொடி யுடன் பொனாய் நகரை நோக்கி குவிந்தனர். மக்களின் எம்.எல்.ஏ., எனப்படும் லட்சுமண் முண்டாவின் ஹாட்ரிக் வெற்றி,உறுதியானது.

2004 இல், லட்சுமண் முண்டா மூலம் பொனாய் பழங்குடியினர் ஒதுக்கீட்டுத் தொகுதி யை சிபிஎம் வென்றது. 2009இல் பாஜக வெற்றி பெற்றது. 2014இல் நடந்த முத்தரப்புப் போட்டி யின் முடிவில் லட்சுமண் முண்டா மீண்டும் வெற்றி பெற்றார். பெரும்பான்மை 1818 வாக்குகள். கடந்த முறை பெரும்பான்மை 12,030 வாக்குகளாக அதிகரித்தது.

பொனாயில் 50 சதவிகிதத்திற்கும் அதிக மான வாக்காளர்கள் பழங்குடியினராவர். கிட்ட த்தட்ட தொகுதியின் பாதி அளவு காடுகள். பல சுரங்கங்களும் உள்ளன. பின்தங்கிய பகுதி யான பொனாய்க்கு லட்சுமண் முண்டா மக்கள் பிரதிநிதியாக வந்த போது அடிப்படை வசதி களில் வளர்ச்சி ஏற்பட்டது. சாலைகள், பாலங்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற  உள்கட்டமைப்புகளை முண்டா மேற்கொண் டார். தொகுதியின் வளர்ச்சித் தேவைக்காக நிதி பெற முதல்வர் அலுவலகம் முன் போராட் டம் நடத்தவும் முண்டா தயங்கவில்லை. மக்க ளுக்காகப் போராடத் தொடங்கிய மக்கள் பிரதிநிதிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த வெற்றி.

பொனாயில் உள்ள நான்கு பஞ்சாயத்து கமிட்டிகளில் மூன்றில் சிபிஎம் அதிகாரத்தில் உள்ளது. சிபிஎம்மில் ஒரு மாவட்ட பஞ்சா யத்து உறுப்பினரும் உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜூவல் ஓரம் இரண்டுமுறை எம்எல்ஏவாக இருந்த பொனாய், ஒடிசா வில் பாஜகவின் கோட்டையாக இருந்தது.  ஆனால், லட்சுமண் முண்டா தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்ட தால், பொனாயில் பாஜக பலவீனமடைந்தது.

;