india

img

மீண்டும் தில்லியை நோக்கி திரளும் விவசாயிகள்

புதுதில்லி, பிப். 11 - மோடி அரசுக்கு எதிராக, அனை த்து விவசாயிகள் கூட்டமைப்பினர் மீண்டும் தில்லியின் கூடுவோம் என்ற  போராட்டத்தை அறிவித்து, தலைநக ரை நோக்கி புறப்படத் துவங்கியுள்ள னர். இதனால், மோடி அரசு விவ சாயிகள் நுழையாதவாறு, வேகவேக மாக தில்லியின் எல்லைகளை மூடி சீல் வைக்கும் வேலையில் இறங்கி யுள்ளது.

பல ஆயிரக்கணக்கில் போலீ சாரையும் குவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் கமி ஷனின் பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழி லாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், லக்கிம்பூர்கேரியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்  பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்,

விவசாய போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதி யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவ சாயிகள் தலைநகர் தில்லியில் போரா ட்டம் நடத்த சம்யுதா கிஷான் மோச்சா  மற்றும் கிசான் மஸ்தூர் மோச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

இதனையடுத்து “தில்லி நோக்கி பேரணி” என்ற பெயரில் நாளை (13-ஆம் தேதி) நடைபெறவிருக்கும் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதி களில் இருந்து 200 விவசாய அமைப்பு களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும் மற்றும் சுமார் 2,000 டிராக்டர்கள் பங்கேற்க லாம், அவர்கள் தில்லிக்குள் நுழைவதற்கு கார், இரண்டு சக்கர வாகனங்கள், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளை பயன்படுத்தலாம், பிரதமர், அமைச்சர்கள், பாஜக தலை வர்களின் வீடுகளுக்கு முன் கூடி போராட்டம் நடத்தலாம், போராட்டத் தில் பெண்களும், குழந்தைகளும் ஈடு படுத்தப்படலாம் என்றும் உளவுத் துறை தகவல்கள் மூலம் மோடி அரசுக்கு தகவல்கள் கிடைத்தன

பதற்றத்தில் மோடி அரசு
உளவுத்துறை தகவலை அடுத்து கடந்த 2021-ஆம் ஆண்டு  நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்  போன்று ஆகிவிடுமோ என்ற பதற்றம் அடைந்துள்ள மோடி அரசு, விவ சாயிகள் பேரணியாக வருவதை தடுக்க தில்லி எல்லைகளை மூடி வரு கிறது. விவசாயிகள் போராட்டத்தை தடுக்க ஹரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர், பஞ்சாப் எல்லைப் பகுதி கள் மற்றும் தில்லி எல்லை சந்திப்பு முனைகளில் கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வரு கின்றன. இதில் பஞ்சாப் எல்லை முற்றி லுமாக சீல் வைக்கப்பட்டு போக்கு வரத்து முடக்கப்பட்டுள்ளது. 

ஹரியானாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, செல்போன் இணைய சேவையும் துண்டிக்கப் பட்டுள்ளது.

இன்று பேச்சுவார்த்தை
போராட்டம் அறிவித்துள்ள விவ சாய சங்கங்களுடன் ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நித்யானந்த ராய், அர்ஜுன் முண்டா ஆகியோர் திங்களன்று சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் விவசாயிகள் போரா ட்டம் ரத்தாகும். இல்லையேல் செவ்வாயன்று தில்லியை விவசாயி கள் முற்றுகையிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.