மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா மருந்தின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து இன்கோவாக். இந்த மருத்துக்கு கடந்த 23-ஆம் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், இம்மருந்தின் விலை இன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டோசின் விலை, அரசு மருத்துவமனைகளில் ரூ.325 (ஜி.எஸ்.டி சேர்க்காமல்) எனவும், தனியர் மருத்துவமனைகளில் ரூ.800 (ஜி.எஸ்.டி சேர்க்காமல்) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2023 ஜனவரி மாத இறுதியில் மருத்துவமனைகளில் இம்மருந்து செலுத்தப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.