பாஜக எம்.பி பிரிஜ் பூஷ்ன் சிங், எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்குப் பாலியில் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி தில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து, பிரிஜ் பூஷன் மீது 1000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரிஜ் பூஷ்ன் சிங், எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.